Tuesday, August 23, 2016

இளைய தலைமுறைக்கு அடிப்படை ஆன்மீகம்=பகுதி 2


3.இந்துமதம் பற்றிய உண்மைகளை அடிப்படையாக விவரிக்கும் நீங்கள்,இந்து மதம் பற்றி மட்டும் தெரிவிக்காமல் பிற மதங்களைப் பற்றியும் கூறுவது எதற்காக

நமது ஊரில் ஒரு சர்ச் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்;அந்த சர்ச் வழியாக ஒரு பக்தி உணர்வுள்ள இந்து நடந்து சென்றால்,அந்த சர்ச்சின் வாசலில் நின்று கொண்டு ஏசுநாதரையும் சில நிமிடங்கள் கும்பிட்டுவிட்டே செல்கின்றான்;இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவில்லை;இந்தியா முழுவதும் இதே நிலைதான்;

இது இந்து தர்மத்தின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது;


அதே சமயம்,உங்கள் குழந்தைகளின் வகுப்பறையில் இருக்கும் கிறிஸ்தவ குழந்தை அல்லது இஸ்லாமியக் குழந்தையிடம் கொஞ்சம் உணவுப் பொருளை(சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு) இது எங்கள் கோவில் பிரசாதம் என்று கூறி கொடுங்கள்;அந்தக் குழந்தை வாங்குமா

இது இந்துக்கள் அல்லாதவர்களின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றது;

நமது பாரத நாட்டில் ஒவ்வொரு இந்துவும் மதச் சொரணையின்றி வாழ்ந்து வருகின்றார்கள்;ஒவ்வொரு வேறு மதத்தினரும் தத்தம் மதம் பற்றிய விழிப்புணர்வோடு இருக்கின்றார்கள்;


இதனால் நாம் ஏராளமான துன்பங்களையும் துயரங்களையும் அநுபவித்து வருகின்றோம்;


No comments:

Post a Comment