Friday, August 12, 2016

வேண்டிய வரங்களை ஒரே நாளில் அருளும்* ஆவணி மஹா அவிட்டம்(17.8.16 புதன்)



சிம்மத்தில் ராகுவும்,கும்பத்தில் கேதுவும் இருக்க,(ராகுவுக்கு அருகில் குரு கன்னியில் இருக்க)அப்போது ராகுவுடன் சூரியனும்,கேதுவுடன் சந்திரனும் வரும் பௌர்ணமிக்கு ஆவணி மஹா அவிட்டம் என்று பெயர்;120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய அரிதிலும் அரிதான ஆவணி மஹா அவிட்டம் இது;

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும்,முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் போது பித்ருக்கள் உலகத்தில் இருந்து நேரடியாகவே வந்து தமது பேரன் பேத்திகளிடம் இருந்து பித்ரு தர்ப்பணத்தை வாங்கிச் சென்றது நமது தமிழ்நாட்டிலும்,ராமேஸ்வரத்திலும்,விஜயாபதி விஸ்வாமித்ர மஹாலிங்கசுவாமி திருக்கோவிலிலும்,காசியில் கங்கைக்கரையிலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்த ஒரு நிகழ்வாக இருந்து வந்தது;

ராமாயண காலத்தில்(இன்று முதல் சரியாக 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) வனவாசத்தில் இருந்த ஸ்ரீராமபிரான் அட்டவீரட்டத் திருத்தலங்களில் ஒன்றான கொறுக்கையில் தனது தந்தையான தசரத மஹாராஜாவுக்கு பித்ரு தர்ப்பணம் செய்தார்;அப்போது விண்ணுலகில் இருந்து நேரடியாகவே வந்து தசரதமஹாராஜா தனது மகன் ஸ்ரீராமபிரானின் தர்ப்பணத்தை ஏற்றார்;தனது மாமனாரின் வருகையைப் பார்க்கக் கூட கூச்சப்பட்ட சீதாபிராட்டி குடிசைக்குள் சென்று மறைந்து கொண்டாளாம்;இப்படிச் சொல்கின்றது  கொறுக்கை வீரட்டானபுராணம்!

அதே போல,இந்த அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் ஆலயத்தின் வாசலில் அமைந்த நதிக்கரையோரத்திலும் கிருத யுகத்தில் வந்த ஒரு துர்முகி வருடத்தில் வந்த  ஆவணி மஹாஅவிட்டம் நன்னாளில் தர்ப்பணம் கொடுத்திருக்கின்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி!இப்படிக் கொடுத்ததன் மூலமாக தசரத மஹாராஜாவுடன் நிறைவடைந்த 71 தலைமுறை முன்னோர்கள் கதி மோட்சம் அடைந்தார்கள்;இதே போல இந்த துர்முகி வருடத்தில் வரும் ஆவணி அவிட்ட நன்னாளில் இங்கே வரும் ஒவ்வொருவருடைய முன்னோர்களுக்கும் கதி மோட்சம் கிட்டும்;முன்னோர்களுடைய சாபங்களும்,பித்ரு தோஷங்களும் விலகும் என்பது சத்தியம்;


கடந்த 25 ஆண்டுகளில் ராகுவின் காரகத்துவமான இணையம்,கணினி,செயற்கைக் கோள்,கைபேசிகளின் விஸ்வரூப தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒழுக்கமாக வாழ்ந்து வருபவர்களின் மனதில் கூட மிதமிஞ்சிய கிளுகிளுப்பு அதிகரித்துவிட்டதால் சுயக் கட்டுப்பாடு குறைந்துவிட்டது;இதனால்,பலர் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதைக் கூட ஒரு சுமையாக நினைக்கத் துவங்கிவிட்டனர்;40 வருடமாக இருந்து வந்த நாத்திகப்பிரச்சாரமும் இதற்குக் காரணமாக இருந்துள்ளது;

இந்நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முறையாகச் செய்யாமல் இருப்பதுதான் இன்று நாம் பல்வேறு விதங்களில் கஷ்டப்படுவதற்குக் காரணம் என்பதை நம்மில் பலர் உணரவே இல்லை;இந்த சிரமம் நீங்கிட இந்த ஆவணி மஹா அவிட்டம் வரும் நாளன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுக்கா சோழாபுரம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரவேண்டும்;


17.8.16 புதன் கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஈடான பவுர்ணமி சிவாலய பூஜை  ஒன்று நடைபெற இருக்கின்றது;இதில் கலந்து கொள்வதோடு,சிவாலயத்தில் ஈசனது அபிஷேகத்திற்குரிய பொருட்களை இந்த நன்னாளில் சமர்ப்பிப்பதன் மூலமாக நமது அனைத்துக் குறைகளும் நீங்கிவிடும்;


ஒவ்வொருவரும் ஐந்து கிலோ பச்சரிசி,ஐந்து கிலோ புழுங்கலரிசி,தாழம்பூ குங்குமம்,விபூதி,நாகலிங்கப் பூக்கள்,மண் விளக்குகள் ஐந்து,அபிசேகத்திற்குத் தேவைப்படும் எண்ணெய் ஒரு லிட்டர்;தேன் ஒரு லிட்டர்,பஞ்சுத்திரிகள் ஐந்து,தீப்பெட்டி,எலுமிச்சை பழங்கள் குறைந்தது ஐந்து;

மிகுந்த சிரமத்தில் இருப்பவர்கள்(இவைகளில் எதுவும் வாங்கிக்கொண்டு வர முடியவில்லையா பரவாயில்லை; சும்மா வந்தாலும் போதும்) மாலை 4 மணிக்கு வந்தால் போதும்;

சரியான ஆன்மீக குருவைத் தேடுபவர்கள்;ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிட்டும்;

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும்;

பல ஆண்டுகளாக மழலைச் செல்வம் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைவேறும்;

பூர்வீகச் சொத்துப் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது முடிவுக்கு வரும்;

தமது மகன் அல்லது மகளுக்கு சரியான வாழ்க்கைத் துணை அமையாத என்று ஏங்குபவர்களுக்கு அந்தக் குறை நீங்கி சிறப்பான திருமண வாழ்க்கை அமையும்;

தொழிலில் பல ஆண்டுகளாக இருந்தும் போதுமான வளர்ச்சி இல்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த நாள் முதல் அபாரமான வளர்ச்சியைப் பெற ஆரம்பிக்கலாம்;


நமது நியாயமான கோரிக்கைகளை குழல்வாய்மொழி அம்பாளிடமும்,விக்கிரபாண்டீஸ்வரரிடமும் ஒப்படைத்து வரமாக வாங்கித் தருபவர் யார் தெரியுமா

இங்கே 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியாகி இருக்கும் மஹாதேவசித்தகுரு ஆவார்;ஆமாம்!

வழித்தடம்:

1.தமிழ்நாட்டிற்கு வடக்குப் பகுதியில் இருந்து வருபவர்கள்:-

மதுரை மாட்டுத்தாவணி டூ ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்;அங்கிருந்து சங்கரன் கோவில் செல்லும் பேருந்தில் சோழாபுரம் என்ற சிறு கிராமத்தின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வருக!

2.தமிழ்நாட்டிற்கு தெற்குப் பகுதியில் இருந்து வருபவர்கள்:-

திருநெல்வேலி டூ சங்கரன் கோவில் வந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் பயணித்து முறம்பு என்ற ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து வடக்கு நோக்கி வருக! முறம்பில் இருந்து ஒரு கி.மீ

3.விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மற்றும் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள்;ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முறம்பு வழியாக செல்லும் டவுண் பஸ்களில் பயணித்து சோழாபுரம் ஸ்டாப்பில் இறங்கி வருக!

வாகனங்களில் பயணிப்பவர்கள் ராஜபாளையம் வந்து(சங்கரன் கோவில்,திருநெல்வேலி சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் S வடிவில் ஒரு பாலம் வரும்;அந்த பாலத்தைக் கடந்ததும் வந்தடையலாம்)

*கடந்த மாத பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் முதன் முறையாக இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்து சித்தர் மகாதேவசித்தகுருவின் ஆசியையும்,அருள்மிகு குழல்வாய் மொழி அம்பாள் சமேத விக்கிரப்பாண்டீஸ்வரர் அவர்களின் அருளையும் பெற்று வளமொடு வாழ்ந்து வருகின்றார்கள்;நாமும் வளம் பெற வருகை தந்து அருளாசிகள் பெறுவோம்;

(நாள் செய்வதை நல்லவன் கூட செய்யமாட்டான் என்பது ஜோதிடப் பழமொழி)

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் ரீங் சிவசிவ


No comments:

Post a Comment