Sunday, May 8, 2016

குடும்ப அமைப்பினால் உருவான சாதனையாளர்கள்!!!


ஒவ்வொரு சிறு விஷயத்திலும் சந்தேகம் கேட்பது குழந்தைகளின் இயல்பு;

அப்படி கேட்கும் போது,அதற்குரிய விளக்கத்தை பொறுமையாகவும்,புரிந்து கொள்ளும் விதமாகவும் சொல்வது பெற்றோர்களின் கடமை;

ஒவ்வொரு நாளும் குழந்தை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தப் பின்னர்,அதனுடன் சில நிமிடங்களாவது(சில மணிநேரம் வரை எனில் மிகவும் நன்று) மனம் திறந்து பேசுவது அவசியம்;


ஆண் குழந்தையாக இருந்தாலும்,பெண் குழந்தையாக இருந்தாலும் இதை 3 வயது முதல் 21 வயது வரை ஒரு நாள் கூட விடாமல் பின்பற்றுவதன் மூலமாக நமது அடுத்த தலைமுறையைப் பொறுப்பாக உருவாக்குகிறோம் என்று அர்த்தம்;


எந்த ஒரு சிறு சந்தேகம் கேட்டாலும்,அதற்கு பொறுமையான விளக்கம் தருவதோடு, “உனக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதைச் செய்! நீயாகச் செய்யும் போது அதற்கு இந்தச் சமுதாயம் எதிர்ப்பு தெரிவிக்கத் தான் செய்யும்;அதற்காக உனது சிந்திக்கும் தன்மையை வெளிப்படுத்தத் தயங்காதே!” என்று ஒரு பாட்டி தனது பேரனுக்கு விளக்கம் கொடுத்து வளர்த்தார்;


அந்தப் பேரன் 1925 வாக்கில் தத்துவத்தில் முனைவர்(Ph.D.,)பட்டம் பெற்றார்;(உலக வரலாற்றில் இவ்வளவு குறைந்த வயதில் தத்துவத்தில் முனைவர் பட்டம் வேறு யாராவது பெற்றிருக்கிறார்களா?)


உலகின் குபேரதேசமாக இருந்த அமெரிக்காவில் ஒரு புதிய மதத்தை ஸ்தாபித்தார்;பைபிளில் இருந்தே சந்தேகம் கேட்டார்;சர்வதேச கிறிஸ்தவமே இவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது;


அவர்தான் ரஜனீஷ் என்ற ஒஷோ!


இவரைப் பற்றி முறையாகத் தெரியவேண்டும்;அறிய வேண்டும் என்றால் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற நூலையே முதலில் வாசிக்க வேண்டும்;


ஒரு கோப்பைத் தேனீர்

காமத்திலிருந்து கடவுளுக்கு

நான் நேசிக்கும் இந்தியா

மறைந்திருக்கும் உண்மைகள்

போன்ற நூல்கள் எல்லாம் அடிக்கடி நம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியவை;

இன்றைக்கு நமது குழந்தைகளிடம் மனம் திறந்து பேச நேரம் கிடைக்கின்றதா?

குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்கும் போதும்

சாப்பிடும் போதும்

புத்தகம் வாசிக்கும் போதும்

முக்கியமான விஷயத்தில் ஒரு தீர்மானம் எடுக்கும் போதும்
கண்டிப்பாக செல்போனை அணைத்துவிடுவது அவசியம்;நமது சிந்தனையை,சிந்திக்கும் திறனை சிதறடிக்கும் இலுமுனாட்டியே செல்போன் ஆகும்;

இவரைப் போலவே,சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் பிறந்து உலகை வெல்லப் புறப்பட்ட அலெக்ஸாண்டரும் அவரது ஆசான் அரிஸ்டாட்டிலால் வளர்ந்தார்;(அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்த கிரேக்கப் பண்பாடு,வழிபாடு,ஜபம்,சம்பிரதாயங்கள் அனைத்தும் நமது தமிழ்ப் பண்பாடு என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;ஆதாரம்:மகா அலெக்ஸாண்டர்(உலகம் சுற்றும் வாலிபன்=தமிழில் ஆர்.முத்துக்குமார்;வெளியீடு:கிழக்குப் பதிப்பகம்;டிசம்பர் 2007)


நாமும் நமது குழந்தையின் மனதில் சாதனையைச் செய்ய வைக்கும் தாகத்தை உருவாக்குவோமா?


இந்த உலகிற்கு குடும்ப அமைப்பை அறிமுகப்படுத்தியது நமது சனாதனதர்மம்! பொறுப்புள்ள குழந்தைகளை உருவாக்குவதன் மூலமாக குடும்ப அமைப்பை நம்மால் வலுப்படுத்திட முடியும்;

நம் ஒவ்வொருவருக்கும் இதற்குரிய பொறுப்பு இருக்கின்றது;
குடும்ப அமைப்பை பாதுகாப்போம்;இந்து தர்மத்தை வலுப்படுத்துவோம்;உலக அரசியலில் இந்து தர்மத்தின் சக்தியை நிரூபிப்போம்!!!



ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment