Monday, May 23, 2016

ஏழரைச்சனி & மாந்தி தோஷம் நீக்கும் மங்கள சனி ஆலயம்!!


வெகு காலத்திற்கு முன்பு,ஈசனாகிய சதாசிவம்,தமது வாயிற்கோப்போன் நந்திபகவானிடம் ஒரு தகவல் சொல்லுகிறார்;

கார்த்திகை நட்சத்திர மண்டலத்தைக் கடந்து கொண்டு இருக்கும் சனீஸ்வரன்,ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழையும் போது ரோகிணியைப் பிளந்து கொண்டு செல்ல இருக்கின்றார்;இதனால்,பூமியில் 12 ஆண்டுகள் வற்கடம்(மழையே பொழியாத நிலை) உண்டாகும்;இதனால்,உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு,பல கோடி உயிர்கள் பஞ்சத்தால் மடியும் சூழ்நிலை உருவாகப்போகின்றது;

இதை நந்திபகவான்,வசிஷ்டரிடம் தெரிவிக்கின்றார்;வசிஷ்டர் தசரதமகாராஜாவிடம் தெரிவிக்கின்றார்;
தசரத மகாராஜா உடனடியாக தனது அமைச்சர்களை அழைத்து மந்திர ஆலோசனை செய்கின்றார்;
முடிவாக,சனீஸ்வரனின் பயணத்தை தடுத்து நிறுத்துவதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வருகின்றார் தசரத மகாராஜா!


சுபமான லக்னத்தை தனது ஆஸ்தான குருவின் அருளால் தேர்ந்தெடுத்த தசரத மகாராஜா,அந்த நேரத்தில் தனது ரதத்தில் ஏறி,வானில் இருக்கும் கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரனை நோக்கிப் பயணிக்கின்றார்;

(முற்காலங்களில் பூமியில் வாழ்ந்து வந்த மன்னர்கள் நீதி,நேர்மையுடன் ஆட்சி புரிந்து வந்தனர்;அதனாலும்,தினசரி இறைவழிபாடு செய்து வந்தமையாலும்,அவர்களால் ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் பயணிக்க முடிந்தது;இந்த திறமை கி.பி.1900 வரை நமது தமிழ்நாட்டில் பலரிடம் இருந்தது!!!)
சனீஸ்வரன் கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் பயணிக்க,அவரிடம் போரிடும் நோக்கில் தசரத மகாராஜா எதிர் கொள்கின்றார்;

ஒரு சாதாரண மனிதன்,நவக்கிரகங்களில் சர்வசக்தி வாய்ந்த தன்னிடம் போரிடும் நோக்கோடு வந்தது ஆச்சரியமாக இருந்தது;
சனீஸ்வரனும்,தசரதமஹாராஜாவும் பேசிக்கொள்கின்றனர்;
முடிவாக,ரோகிணி நட்சத்திரத்தை பிளந்து கொண்டு செல்ல மாட்டேன் என்று சனீஸ்வரன்,தசரதமஹாராஜாவுக்கு வாக்களிக்கின்றார்.இதன் மூலமாக 12 ஆண்டுகள் பூமியில் வற்கடம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது;

மேலும் தசரதமஹாராஜாவின் வேண்டுதலின் படி,சனீஸ்வரன் சுபச்சனியாக அதுவும் மங்களச்சனியாக தனது குடுமத்தோடு வந்து பூமியில்=பாரத தேசத்தில்=அதுவும் நமது தமிழ்நாட்டில் திருநாரையூர் என்ற இடத்தில் அருள்பாலிக்கத் துவங்குகிறார்;இச்சம்பவம் நிகழ்ந்து சுமாராக 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;

சனீஸ்வரன் தமது இரு மனைவிகளான மந்தாதேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன் களான மாந்தி,குளிகனுடனும்,இவர்களை வணங்கிய நிலையில் தசரதமஹாராஜா இருப்பது போல சுவாமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது;சந்திர காந்தக் கற்களால் வடிக்கப்பட்டிருப்பதால்,அபிஷேகப்பால் கறுப்பு நிற சுவாமி சிலையை நீல நிறமாக நமது கண்களுக்கு காட்டுகின்றது;அப்படி யார் கண்களுக்குத் தெரிகின்றதோ,அவர்களுக்கு மங்கள சனியின் அருள் கிடைத்துவிட்டதாக அர்த்தம்; 

திருநாரையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மேற்கு நோக்கியவாறு அருள்பாலித்து வருகின்றனர்;

ராமநாதசுவாமி கிழக்கு நோக்கியவாறும்,பர்வத வர்த்தினி தெற்கு நோக்கியும் ஒரே மண்டபத்தில் அருள்பாலித்து வர,
மங்கள சனிபகவான் தனது திசையான மேற்கு நோக்கியவாறு அருள்பாலித்து வருகின்றார்;அவரது சன்னதிக்கு எதிராக அவரது வாகனம் காக்கை,நந்தி போல அமர்ந்திருக்க,அதன் பின்புறத்தில் இரும்பால் ஆன கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கின்றது;

ஜோதிடப்படி ,ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருந்தால் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருந்தால்,அவரை யாராவது இப்பிறவியில் மாந்திரீகத்தால் வசியம் செய்வார்கள்;அல்லது மாந்திரீகத்தால் அவரது இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்க முடியும்;இதைச் சரி செய்ய இந்த கோவிலுக்கு ஒருமுறை வருகை தந்து மங்கள சனிபகவானிடம் வரங்களை வாங்கிச் செல்வது அவசியம்;

சனிக்கிழமையன்று ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரை மங்கள சனி சன்னதியில் அவருக்கு நேராக அமர்ந்து அவரிடம் நமக்குத் தேவையானதை வேண்டிட வேண்டும்;

நம் ஒவ்வொருடைய ஜாதகப்படி,நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனீஸ்வரனே!
சனீஸ்வரனின் தாக்கம் ஏழரைச்சனி(16.12.2017 வரை விரையச்சனியாக தனுசு ராசிக்கும்;ஜன்மச்சனியாக விருச்சிக ராசிக்கும்;பாத/வாக்குச்சனியாக துலாம் ராசிக்கும்) அஷ்டமச்சனி(16.12.2017 வரை மேஷராசிக்கு);அர்த்த அஷ்டமச்சனி(16.12.2017 வரை சிம்மராசிக்கு);கண்டச்சனி(16.12.2017 வரை ரிஷபராசி) உள்ளவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று இங்கே வந்து ராகு காலத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும்;

பிறகு,வேறு எங்கும் செல்லாமல்(வேறு எந்தக் கோவிலுக்கும்,உறவினர்கள் வீடுகளுக்கும்)தமது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக ஏழரைச்சனி,சுபச்சனியாக மாறிவிடும்;ஆமாம்!

அதே போல,லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருக்கப் பிறந்தவர்கள் இந்த ஆலயத்திற்கு ஒருமுறை வருகை தந்து வழிபடுவதன் மூலமாக அவர்களின் ஜாதகத்தில் யோகம் தரக் கூடிய கிரகங்கள் செயல்பட ஆரம்பிக்கும்;


இன்றைய காலகட்டத்தில்,பலருக்கு ஜாதகமே இயங்கவில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றோம்;அதற்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் மாந்தி/குளிகனே காரணம் ஆகும்;


லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருக்கப் பிறந்த ஒருவரின் ஜாதகத்தில் யோகம் தர வேண்டிய கிரகத்தை செயல்படாமலும்,கஷ்டம் தரக்கூடிய கிரகத்தை மட்டும் இயங்க வைக்கக் கூடிய ஆற்றல் மாந்தி/குளிகனுக்கு உண்டு;இதைச்சரி  செய்ய விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு ஒருமுறையாவது வருகை தந்து அபிஷேகத்தைப் பார்ப்பது அவசியம்;

அபிசேகம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டி இருக்கும்;அபிஷேகம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொண்டால் பூசாரியின் செல் எண்ணைத் தரமுடியும்;

ஜோதிட அனுபவப்படி பார்க்கும் போது,ஒருவருக்கு நடப்பில் எந்த ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றாலும், அந்தக் கிரகத்துடன் மாந்தி இணைந்திருந்தாலும் அவர்களும் ஒருமுறை இந்த ஆலயத்திற்கு வந்து வரங்களை வாங்கவேண்டியது அவர்களது ஜாதகக் கடமை ஆகும்;

பூமியில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த ஆலயத்திற்கு ஒருமுறை வரவேண்டியது அவசியம்;ஏனெனில்,இன்றைய காலகட்டத்தில் பல ஜோதிடர்களுக்கு மாந்தியைக் கணிக்கத் தெரிவதில்லை;அதனால்,பிறந்த ஜாதகத்தில் மாந்தியைக் குறிப்பதும் இல்லை;மாந்தியைக் கொண்டு செய்யப்படும் கெட்ட செயலே மாந்தி ரீகம் என்று அழைக்கப்படுகின்றது;

எப்பேர்ப்பட்ட மாந்தி ரீகத்தையும் முறியடிக்கக் கூடிய ஆற்றல் தினசரி அன்னை அரசாலையின் 12பெயர்களை  30 நிமிடம் ஜபித்தாலே கிடைத்துவிடும்;(அசைவம்,மதுவைத் தவிர்த்துவிட்டு!)


ஏழரைச்சனி ஆரம்பிக்கும் போது திருநள்ளாறு செல்ல வேண்டும்;ஏழரைச்சனி நிறைவடையும் போது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபடவேண்டும்;ஆனால்,எப்போதும்,எந்தச் சூழ்நிலையிலும் மங்கள சனீஸ்வரை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்;

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 8 வது கி.மீ.தோலைவில்(நாச்சியார் கோவிலுக்கு முந்தைய கிராமம்) திருநாரையூர் அமைந்திருக்கின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் மங்கள சனீஸ்வராய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment