Friday, January 22, 2016

ஈசனின் பெயரின் பெயர்க்காரணங்களும்


ஒரு உருவம்,ஓர் நாமம் இல்லாத இறைவனை ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு நாம் அர்ச்சிக்கின்றோம்;ஆராதிக்கின்றோம்;

ஆனால்,ஒவ்வொரு நாமத்திற்கும் ஆழ்ந்த கருத்துக்கள் உண்டு;
ஆனால்,அதைப் பற்றி நாம் யோசிப்பதே கிடையாது;

 திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வந்தது;ஈசனைத் தவிர யாரும் அதை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை;அண்ட சராசரங்கள் அனைத்தின் நலனுக்காக ஈசன் அந்த ஆலகால விஷத்தை உண்டான்;இந்தத் தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது;அதன் காரணமாகவே “தியாகராஜன்” என்று போற்றப்படுகின்றான்;

நம்மிலும் எத்தனையோ பேர்கள் தியாகராஜன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இருக்கின்றோம்;ஆனால்,மற்றவர்களுக்காக வாழ்வில் இதுவரை எதைத் தியாகம் செய்திருக்கின்றோம்?

கருணையின் எல்லை!
என்றுமே அணுகமுடியாத எல்லை கடந்த துணிவு!!
அத்தனையும் கடந்த நிலையில் உண்மைக்காகவே கடுமையாக விரதம் இருந்து,வந்த வேதனைகள் எல்லாவற்றையும் கழித்தவன் அண்ணாந்திருக்கும் அண்ணாமலையான்!!!
இதனால் தான் ஈசனுக்கு “அண்ணாமலையான்” என்று பெயர் வைத்தார்கள்;ஏனென்றால்,கருணையின் எல்லை;அணுகமுடியாத எளிமை;ஆனால்,அணுக முடியும்;

இதுதான் தெய்வீகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதுமை;ஆனால், அணுக முடியும் என்பதை யாரால் தான் புரிந்து கொள்ள முடியும்!

நமக்கு வைத்த பெயருக்குத் தகுந்தாற்போல வாழவில்லை என்றால்,நாம் அந்த இறைநாமத்தை அவமதிப்பதாகத்தான் கருதப்படும்;ஆகவே,முடிந்த மட்டும் நாம் வைத்துள்ள பெயர்களுக்குத் தகுந்தவாறு வாழ்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்;

நன்றி:எங்கும் சிவன்;எதிலும் சிவன்;பக்கங்கள் 22,23

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment