Wednesday, September 5, 2012

வாழ்க்கை,வக்கிரம் இரண்டில் எது நமக்குத் தேவை?


ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞர்,இங்கிலாந்து தலைநகரில் மேல்படிப்புகள் முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.புது டெல்லியில் பணிபுரிந்துவருகிறார்.அவருக்கு ஒரு பெண்ணை திருமண நிச்சயம் செய்கிறார்கள்.அந்தப் பெண்ணோ புது டெல்லியிலேயே பட்டப்படிப்பு படித்து முடித்து,ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.

நிச்சயித்தப் பின்னர்,ஒரு நாள் அந்த பட்டதாரிப்பெண் இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு முடித்த தனது வருங்காலக் கணவரை சந்திக்கிறார்.அப்போது, “உனது அம்மா பட்டிக்காட்டுப் பெண்ணாக இருக்கிறார்;அவரை நான் எப்படி சமாளிப்பது?”என்று கேட்கிறாள்.
நிச்சயித்த திருமணம் நின்று போனது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மூன்று தலைமுறையாக வர்த்தகம் செய்து வரும் குடும்பம் அது.இந்த தலைமுறையில் வர்த்தகம் செய்பவரின் பெயர் சர்ஜீவ் பன்ஸல்.அவர் தனது மகன் அனின் பன்ஸலை எம்.பி.ஏ.,படிக்க வைக்கிறார்;படித்து முடித்து தனது தந்தையின் வர்த்தகத்தை கவனித்துவருகிறார்;இவருக்கு பட்டப்படிப்பு படித்த மற்றும் நல்லகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமண நிச்சயம் செய்கிறார்கள்.அந்த மணப்பெண்ணின் பெயர் ஆகாங்ஷா.
அந்தப்பெண் நிச்சயிக்கப்பட்டப்பிறகு,அனில்பன்ஸலிடம் அடிக்கடி தனியே பேசியிருக்கிறாள்.அப்போது, அவள் சொன்னதைக் கேட்டு சில நாட்களாக அனில் பன்ஸல் இரவு நேரங்களில் தூங்கவில்லை;
உனது தந்தையிடம் சொல்லி,உங்களுடைய வீடு,தொழில் இவைகளை உனது பெயரில் மாற்று;அதுவும் நமது திருமணத்துக்கு முன்பே இதைச் செய்து முடி.அப்போதுதான் நமக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
இதை தொடர்ந்து சில வாரங்களாக அவள் நச்சரிக்கவே அனில் பன்ஸல் ஒரு தீர்க்கமான பதிலை அவளிடம் சொன்னார்: என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள்;நான் எப்படி எல்லாவற்றையும் என் பெயரில் மாற்றச் சொல்ல முடியும்?
ஆனால்,ஆகாங்ஷா தனது பேச்சில் உறுதியாக இருந்தாள்,முடிவாக அனில் பன்ஸல் தனது குடும்பத்தாரிடம் பேசி ஒரு பொது முடிவு எடுத்தார்;விளைவு? இவர்கள் திருமணம் நடைபெறவில்லை;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அபிஷேக்கும்,பூஜாவும் அடிக்கடி வேலை நிமித்தமாக இந்தியா முழுக்க பயணிக்கும் சூழ்நிலையில் இருந்தனர்;இதுவே அவர்களை காதலர்களாக மாற்றிவிட்டது.காதல் இவர்களை வெகு விரைவிலேயே திருமணம் செய்யும் முடிவை எட்ட வைத்துவிட்டது.
இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வரும் வரையிலும் பூஜாவின் செயல்கள் ஒரு முன்னுதாரணமான பெண்ணைப் போல இருந்தன;ஒவ்வொரு செயலிலும் அவளது புத்திசாலித்தனமும்,சக ஊழியர் மீதான அக்கறையும்,விட்டுக்கொடுத்தலும்,பொறுப்புணர்ச்சியும் தெரிந்தன.இவையே அபிஷேக்கைக் கவர்ந்தன;இந்த குணங்களால் இப்பேர்ப்பட்ட பெண்ணிற்கு தான் கணவனாக இருப்பதே பெருமை என்று எண்ணம் தலைதூக்கியது.
திருமணம் பற்றி இருவரும் பேசி முடிவெடுத்ததும்,அபிஷேக்கிற்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை;தனிமையில் அழுதேவிட்டார்;நாம் இந்தியாவில்தான் வசிக்கிறோமா? என்ற சந்தேகம் அடிக்கடி வரத்துவங்கிவிட்டது.ஏனெனில்,பூஜா சொன்ன வார்த்தைகளால் அபிஷேக் திருமணம் பற்றிய நம்பிக்கையில் நிலைகுலைந்து போனான்;
“நாம் திருமணம் வரை காத்திருக்க வேண்டாம்;ஆனால்,குழந்தை பிறக்கக் கூடாது; இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம்;இல்லாவிட்டால்,வேறு ஒரு பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள்”
பூஜாவிற்குப் பிடித்தது திருமணம் அல்ல;திருமணம் செய்து கொள்ளாமல் அபிஷேக் உடன் சேர்ந்து இருப்பது.
முடிவு?
அபிஷேக் ஒரு பி.காம்.படித்து இதுவரை வேலைக்கே செல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தற்போதைய கால கட்டத்தில் பூஜா,ஆகாங்ஷா போன்ற பெண்களின் எண்ணிக்கை குறைவு;இருப்பினும் இந்த எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.இந்துப்பண்பாட்டைக் காக்க வேண்டிய இந்தியப் பெண்களிடம் இப்படிப்பட்ட சிந்தனை எப்படி வந்தது?திமிர்த்தனத்தை மட்டுமே காட்ட வைக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தினால் வந்தது.மலட்டுத்தனம் நிறைந்த மெக்காலே கல்வித்திட்டத்தால் யாரும் யாரையுமே மதிக்காத பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.அதுவும் சுமார் 200 ஆண்டுகளாக!!!




திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் LIVING TOGETHER மூலமாக ஐரோப்பாவும்,அமெரிக்காவும் இன்று ஒற்றை இலக்கத்தில் ஜனத்தொகை வீழ்ச்சியைத் தொட்டிருக்கிறது.
பெண் சுதந்திரம் என்ற கருத்துருவாக்கம் 1960களில் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் உருவானது;அது 1990களில் யார் வேண்டுமானாலும்,யாரிடம் வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் என்ற சுதந்திரமாக உருமாறிவிட,அங்கே குழந்தை பிறப்புவிகிதம் பெரும் சரிவை சந்தித்துவிட்டது;குழந்தை பிறப்பு விகிதிம் குறைந்து போய்விட்ட ஐரோப்பியக் கண்டம் தற்போது கிழட்டு நாடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன;ஒரு புள்ளிவிபரப்படி, அமெரிக்காவின் மக்கள் தொகை 31 கோடி! ஆனால்,நமது இந்தியாவில் டீன் ஏஜ் எனப்படும் பருவ வயதினரின் மக்கள் தொகை மட்டும் 45 கோடிகள்!!



இதன் மூலமாக கி.பி.2100க்குள் ஆசியாவினர் நம்மை அடிமைப்படுத்திவிடுவார்களோ? என்ற பயம் வேறு அவர்களுக்குத் தொற்றிவிட்டது.
அதனால் தான்,தாம் எப்படி (பெண் சுதந்திரம்,பெண் உரிமை,ஆணும் பெண்ணும் சமம்,மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கும்,மாணவிகளுக்கும் தனித்தனி ஆஸ்டல் கிடையாது;) நாசமாகப் போனார்களோ,அதை நம்மிடம் பரப்பி வருகிறார்கள்.இந்த உலகமயமாக்கலின் விளைவே பூஜாக்களும்,ஆகாங்ஷாக்களும்!!!


No comments:

Post a Comment