Wednesday, September 21, 2011

மஹாளய அமாவாசை என்றால் என்ன?







பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து,அந்தந்த நாட்களுக்குரிய பித்ரு பூஜைகளை செய்துகொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் இருக்கும் அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மஹாளய அமாவாசை நாள்(26.9.11 திங்கள்) ஆகும்.இந்த 14 நாட்களில் தாம்பத்தியம் செய்யக்கூடாது;காமரீதியான நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்திட வேண்டும்.இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.



பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப்பின்னர்தான்,அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை என்னவென்று கூறுவது.



பூமியில் பிறந்த எந்த ஜாதி,மதம்,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள்,கரும்பு,அன்னம்(சோறு),பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆய்வு முடிவுப்படி,ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.



பலரது பிறந்த ஜாதகப்படி,பலவித யோகங்கள் இருந்தாலும்,கடன் அல்லது நோய் அல்லது விபச்சாரம் அல்லது சோரம் போகுதல் அல்லது வாழ்க்கைத்துணைக்குத் துரோகம் செய்தல் அல்லது மீளாத பிரச்னைகளில் மாட்டுதல் =இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளால் உலகிற்கு நாகரீகம் கற்றுத்தந்த நம் தமிழினம் தற்போது நாத்திகம் என்னும் நரகலால் பித்ரு தர்ப்பணத்தின் பெருமையை உணராமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.நாத்திகம் பேசும் நமது தலைவன்கள்,திருட்டுத்தனமாக பித்ரு தர்ப்பணங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வளவு சுயநலம்? தனது தொண்டர்கள் மீது எவ்வளவு அக்கறை?



சரி போகட்டும்.நாம் இந்த மஹாளயபட்சத்தன்று(26.9.11 திங்கள்) செய்ய வேண்டியது என்ன?



நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.



அங்கிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது.மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள்.அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.



தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும்.மனைவியின் அனுமதியை தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த ஆண்கள் பெற வேண்டும்.அப்பொழுதுதான் தர்ப்பண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.மகரிஷிகள்,சித்தர்களின் ஆசி கைகூடும்.பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்.இந்த 15 நாட்களில்(12.9.11 முதல் 26.9.11 வரை) தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள்,புரட்டாசி அமாவாசை எனப்படும் மஹாளயபட்ச அமாவாசை நாளான 26.9.11 அன்று மட்டுமாவது அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,உளுந்தம்பருப்பு,ரவை,மைதா,கனிகள்,சாத வகைகள்,உலர்ந்த கனிகள்,ஆடைகள்,பாதணிகள்,ஆபரணங்கள் தானம் அளிக்கலாம்.வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான சிவாலயங்களில் செய்யலாம்;சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம்.அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்;



இது எதுவும் முடியாதவர்கள்,நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும்) அளிக்கவேண்டும்.இதை புரட்டாசி அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும் என்றில்லை;இன்று 21.9.11 மட்டும் அல்லது 21.9.11 முதல் 26.9.11 வரை தினமும் அல்லது 26.9.11 மட்டும் செய்யலாம்.



ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்பு ஆன்மீகப் பரிசு:24.9.2011 சனிக்கிழமை அன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளில் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,நூறு ட்ரில்லியன் கோடி கோடி கோடி புண்ணியம் நமது பித்ருக்களின் ஆசியால் நமக்குக் கிடைக்கும்.வருகிறீர்களா அண்ணாமலைக்கு? என்னை அங்கே சந்திக்கலாம்.



படத்தில் இருப்பது நமது முன்னோர்களின் வடிவமாகிய அண்டங்காக்கை.



ஓம்சிவசிவஓம்










2 comments:

  1. Dear Boss

    fantastic "I really waiting for this post"

    Ok Kindly Give Slogams for "Tharpanam"

    Regards
    palanisamy
    Mugapair west

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான தகவல்கள் அய்யா, நன்றி

    ReplyDelete