Thursday, September 1, 2011

பூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்





அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்

















மூலவர் : பூமிநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : ஜெகதாம்பிகை

தல விருட்சம் : மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள்

தீர்த்தம் : -

ஆகமம்/பூஜை : -

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : -

ஊர் : திருச்சி

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு







பாடியவர்கள்:



-



திருவிழா:



வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நால்வர் மற்றும் சேக்கிழார் குருபூஜை. மாசி மகம், தைப்பூசம் நாட்களில், பஞ்ச மூர்த்திகளுக்கு காவிரியாற்றில் தீர்த்த உற்சவம் நடக்கும்.



தல சிறப்பு:



இங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.



திறக்கும் நேரம்:





காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



முகவரி:



அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், திருச்சி-620 001.



போன்:



+91 431 2711 3360



பொது தகவல்:



இங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.அருகில் பேயுருவத்துடன் காரைக்காலம்மையார் உள்ளார். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்திக்கு தனி விமானம் வடிக்கப்பட்டுள்ளது. மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தை ஆகிய பஞ்ச விருட்சங்கள் (தல மரங்கள்) இங்குள்ளன.

பிரகாரத்தில் நால்வர், சேக்கிழார், வன்னி மரத்தடி விநாயகர், நாகாபரண விநாயகர், சப்தகன்னியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆஞ்சநேயர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோயில் முகப்பில் காவல்தெய்வம் கருப்பண்ணர் சன்னதி இருக்கிறது. நவக்கிரக சன்னதியிலுள்ள சூரியன்,தன் மனைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார்.







பிரார்த்தனை



வீடு, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் குறை நீங்க இங்குள்ள பூலோகநாதரை வழிபடுகின்றனர்.



நேர்த்திக்கடன்:



சுவாமிக்கு பூமிக்கடியில் விளையும் சேனை, உருளை, கேரட், பீட்ரூட், வேர்க்கடலை ஆகியவை சேர்த்த அன்னத்தை நைவேத்யம் செய்வர்.



தலபெருமை:



வாஸ்து பரிகாரம்: பூமி, வீடு, கட்டடம் தொடர்பாக பிரச்னை உள்ளவர்கள் வாஸ்து நாளன்று நடக்கும் யாகத்தில் பங்கேற்கலாம். யாகத்தில் பயன்படுத்திய 6 கலசங்களில் இருக்கும் தீர்த்தத்தால், பூலோகநாதருக்கு மகாபிஷேகம் செய்வர்.இவ்வேளையில் சுவாமிக்கு பூமிக்கடியில் விளையும் சேனை, உருளை, கேரட், பீட்ரூட், வேர்க்கடலை ஆகியவை சேர்த்த அன்னத்தை நைவேத்யம் செய்வர்.





தல வரலாறு:



இப்பகுதியை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு, ஒருமுறை நிர்வாக ரீதியான பிரச்னை ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்தும், பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.அப்போது, மகான் ஒருவர் மன்னனைச் சந்தித்தார். அவனிடம் மன்னன் தன் பிரச்னையைத் தெரிவித்தான். மகான் அவனது அரண்மனை கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகச் சொல்லி, சிவனை வழிபட பிரச்னை தீரும் என்றார். எனவே, மன்னன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இவருக்கு "பூமிநாதர்' என பெயர் சூட்டப்பட்டது. இதன்பிறகு பிரச்னை தீர்ந்தது.பிற்காலத்தில் அம்பிகை சன்னதி எழுப்பப் பட்டது. இவளை ஜெகதாம்பிகை என்பர்.





சிறப்பம்சம்:



அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் உள்ள நந்திதேவர், கையில் மத்தளம் வாசித்தபடி இருக்கிறார்.







No comments:

Post a Comment