Sunday, November 28, 2010

சித்தர்களின் எண்ணிக்கை

சித்தர்களின் எண்ணிக்கை

ஆயிரக்கணக்கான சித்தர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் 18 பேர்கள்.

விஷ்ணுபுராணம் கூறும் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 88,000பேர்கள் ஆவார்கள்.

காரை சித்தர் கருத்தின்படி,நூறு கோடி சித்தர்கள் இருக்கிறார்கள்.அதாவது சத கோடிபேர்கள்!!!!

கபீர்தாசர் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 84 தான்!
சித்தர்கள் மூன்று மரபுகளில் ஏதாவது ஒரு மரபைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.முதல் மரபு கைலாய வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் கைலாய நாதன்.
இரண்டாவது மூலவர்க்கம்.இவர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வம் யாராவது ஒருவர் இருப்பர்.மூன்றாவது பால வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் முருகக்கடவுள் ஆவார்.

கவுதமர்,அகத்தியர்,சங்கரர்,வைரவர்,மார்க்கண்டர்,வன்மீகர்,உரோமர்,புசண்டர்,சட்டைமுனி,நந்தீசர்,
திருமூலர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,புலத்தியர்,கருவூரார்,
கொங்கணர்,போகர்,புலிப்பாணி என்பது பதினெட்டு சித்தர்களில் ஒரு வரிசை.

திருமூலர்,ராமதேவர்,கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி,வான்மீகி,கமலமுனி,போகநாதர்,மச்சமுனி,கொங்கணர்,
பதஞ்சலி,நந்திதேவர்,போதகுரு,பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி,சுந்தரானந்தர்,குதம்பையர்,கோரக்கர் என்பது பதினெண் சித்தர்களில் இதுவும் ஒரு வரிசையாகும்.

ஆன்மீகக்கடலின் யூகப்படி,20,00,000 ஆண்டுகளாக நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்தும்,பிறந்தும்,இறந்தும்,மீண்டும் பிறந்தும் வாழ்கிறோம்.எனவே,இந்த இரண்டு பட்டியல் அடிக்கடி மாறும் என எடுத்துக்கொள்ளலாம்.இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஓடி விட்டன.மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக நாகரீகமடையத்துவங்கிய கால கட்டமே இராமாயணம் நிகழ்ந்த கால கட்டம் ஆகும்.

2 comments:

  1. 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு இராமாயணம் நடந்ததாக தாங்கள் கூறுவதிலிருந்து எந்த அளவிற்கு நம்மிடம் திரிந்து வந்திருக்கும். நீங்களே விளக்குங்கள்.

    ReplyDelete