Wednesday, November 17, 2010

மனவளக்கலையின் மகத்துவமும்;நமது கர்மங்கள்/பாவங்களை இப்பிறவியிலேயே அழிப்பதற்கான வழிமுறையும்


குண்டலினி சக்தி என்றால் என்ன?

நமது உடலின் கீழ்முதுகுப்பகுதியில் மலத்துவாரத்துக்கு சற்றுமேலே அதன் அழுத்தத்தோடு கிடப்பதுதான் உருண்ட குண்டலினி.மனிதனாகப் பிறந்த அத்தனைபேருக்கும் இந்த குண்டலினி சக்தி இருக்கிறது.இங்குதான் ஞானத்தின் தலைவனாகிய விநாயகக் கடவுள் இருக்கிறார்.நமது உயிரின் மையப்புள்ளியும் இதேதான்.ஒருவரின் உயரம் எவ்வளவோ,அதில் எட்டுச்சாண் உயரத்துக்கு இந்த குண்டலினியின் உயரம் இருக்கும்.

இதனை குறிப்பிட்ட தியானம் மூலமாக எழுப்பி,நமது முதுகுத் தண்டுவடம் வழியாக உருட்டிச்சென்று,பின் கழுத்து வழியாக அப்படியே மேலேற்றிச் சென்று அதை நமது உச்சந்தலையில் நிறுத்தினால்,கிடைக்கும் உணர்வு என்ன தெரியுமா?

ஒரு பெண்ணை உடலுறவுகொண்டு,அவளை உச்சகட்ட இன்பத்துக்குக் கொண்டு சென்று,அப்போது நாமும் உச்சகட்ட இன்பத்துக்கு வந்து நமது விந்து வெளியேறும்போது என்ன பரவசம் ஏற்படுமோ,அதை விட பல மடங்கு பரவசம் நமது உடல் மற்றும் மனதில் ஏற்படும்.ஒரு முறை அந்த சுகத்தை அனுபவித்தவர்கள்,திரும்பத்திரும்ப அனுபவிக்கத்துடிப்பார்கள்.அப்படி குண்டலினி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இந்த உலகத்து இன்பங்கள் அனைத்தும் தூசியாகத் தெரியும்.

இந்த குண்டலினி சக்தியை எழுப்ப பல ஆண்டுகள் ஆகும்;பலருக்கு பல பிறவிகள் ஆகும்;

சொன்னவர்:சித்தஜாலம் என்ற நாவலில் இந்திரா சவுந்தர் ராஜன்.

இந்த குண்டலினி சக்தியை இந்தப்பிறவியிலேயே அதுவும் ஓரிரு ஆண்டுகளிலேயே எழுப்புவதற்கு பயிற்சியளிக்கும் ஆன்மீக அமைப்புதான் மனவளக்கலை மன்றம் ஆகும்.இவர்களின் வெளிப்படையான அடையாளம் வாழ்க வளமுடன்!!!

இந்த மனவளக்கலைமன்றமானது தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் அமைந்திருக்கின்றது.நீங்கள் தினமும் காலை அல்லது மாலை அரை மணிநேரத்துக்கு மனவளக்கலைமன்றத்துக்குச் சென்று பயிற்சியெடுத்துக்கொண்டால்,ஒரே வாரத்தில் மூலமையத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை குரு தீட்சை மூலமாக எழுப்பி விடுவார்கள்;அது முதலில் புருவ மையத்தில் வந்து நிற்கும்.அப்படி நிற்கும்போது சிலருக்கு மட்டும் அந்த குண்டலினி சக்தி வேகமான சக்கரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.ஒருவாரத்தில் அதை மீண்டும் மூலமையத்துக்கு இறக்கிவிடுவார்கள்.

தொடர்ந்து தினமும் மன வளக்கலைமன்றத்துக்குச் சென்று பயிற்சி யெடுக்க வேண்டும்;புருவமையத்திலிருந்து,உச்சந்தலைக்கு அந்த குண்டலினி சக்தி நமது தினசரி தவத்தால் உயரும்! அதற்குப்பிறகும் தொடர்ந்து தவம் செய்தால்(தினசரி மன வளக்கலை மன்றத்துக்கு சென்று வந்தால்) நமது தலைக்கு மேலே ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நிற்கும்.இந்த நிலையை அடைய சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம்.அதுவரையிலும் மன வளக்கலை மன்றத்துக்கு தினமும் செல்ல வேண்டும்.அப்படிச் செல்வதால்,நமது தவ ஆற்றல் அதிகரிக்கும்.நமது கர்ம வினைகளை அழித்துவிடலாம்.ஆம்!!!

நமது உச்சந்தலையிலிருந்து ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நின்ற உடனே நமது பிறந்த ஜாதகப்படி,நாம் இந்தப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள்,விபத்துக்கள்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,போராட்டங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

எனவே,மனவளக்கலையை இந்து மதத்தின் நவீன வடிவம் என்று தாராளமாகக் கூறலாம் இல்லையா?

No comments:

Post a Comment