Saturday, November 13, 2010

முற்பிறவி மன்னர்கள்,அதிபர்கள்,தலைவர்களின் நிலை

மூன்று விதமான கர்மாக்கள்

1.திருடா கர்மா,2.அதிருடா கர்மா,3.திருடாதிருட கர்மா

1.திருடாகர்மா:நிரந்தரமான கர்மவினைகளுக்கு உட்படுத்தி இது என் தலைவிதி என்று சொல்லும் அளவுக்கு ஆயுள் உள்ளவரை நீடிக்கும்.இவற்றைத் தவிர்க்கவே முடியாது.

2.அதிருடா கர்மா:தற்காலிக முரண்பாடுகளை தவிர்ப்பதன்மூலமாக இவைகளை அறிந்து தவிர்க்க முடியும்.

3.திருடாதிருட கர்மா:இந்த வினைப்பயனை ஒருவரால் முழுமையாக இல்லாவிட்டாலும் 80% அளவுக்கு பரிகாரம்,தெய்வீக வழிபாடுகள்,மந்திரஜபம்,தானங்கள் மூலம் மாற்றிக்கொள்ளமுடியும்.

இந்த மூன்றுவிதமான கர்மாக்களும் தனுசு,மீனம்,மிதுனம்,கன்னி லக்னத்தில் பிறந்து,கேந்திராதிபத்திய தோஷம் உள்ளவர்களை மட்டுமே தாக்கும்.அதுவும் முற்பிறவியில் ஒரு நாடு அல்லது இனத்தின் தலைவனாக இருந்து கடுமையான பாவங்களைச் செய்தவர்களுக்கு அடுத்தடுத்த பிறவிகளில் இப்படிப்பட்ட இலக்கினங்களில் பிறக்கச் செய்து துன்புறுத்தும்.

நாட்டின்/இனத்தின் தலைவனாக இருந்து பாவம் செய்தவர்கள்,மறுபிறவியில் பலவிதத் திறமைகளோடு இருந்தாலும்,சாதாரண வாழ்க்கையே வாழவேண்டும்.திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட வேண்டும் என்று ஸ்ரீவராஹமிஹிரரின் பிரும்ம சம்ஹிதை தெரிவிக்கிறது. நன்றி:பி.எஸ்.பி.ஐயாவின் விடியல் பக்கம்33,அக்டோபர்2008. ஆக,நம்ம பக்கத்து தீவு அதிபரின் நிலை?

No comments:

Post a Comment