Tuesday, July 13, 2010

திருடுவதில் முன்னணி வகிப்பது தனியார் செல்போன் நிறுவனமா? அல்லது தனியார் வங்கியா?

செல்போன் நிறுவனங்கள் எப்படி திருடுகின்றன?

கி.பி.2005 ஆம் ஆண்டிலிருந்து நான் செல்போன் உப யோகிப்பாளனாக இருக்கிறேன்.அப்போது அது மூன்றுவருட இன் கம்மிங் வசதியை முதன்முதலில் ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
பலநாட்கள் நான் குறைந்த பட்ச இருப்புத்தொகையாக ரூ.4.00/-ம்,சில பைசாக்களும் எனது செல்போனில் வைத்திருப்பேன்.வேறெதற்கு? அவசரமெனில் நழுவிய அழைப்பு தருவதற்குத் தான்.
மறுநாள் காலை சும்மாவாச்சும் எவ்வளவு இருப்பு இருக்கிறது? எனப்பார்த்தால் ஒரு ரூபாயை விட குறைந்திருக்கும்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் எனது செல்லை எனது மனைவி, குழந்தைகள்,நட்பு வட்டம் என யாரும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
இதுபோல், இந்த ஐந்துவருடங்களில் பல முறை இதுபோல் செல்போன் நிறுவனம் எனது மூன்று ரூபாய்களை பல நூறு தடவை திருடியிருக்கிறது.
இதை உணர்ந்து,நானும் எனது செல்போன் பேச்சுத்தொகை இருப்பினை ரூ.1.00க்கும் குறைவாக வைத்திருந்தாலும்,அதிலும் பத்து அல்லது இருபது பைசாக்கள் மறுநாள் காலையில் பரிசோதித்துப்பார்த்தால் குறைந்திருக்கும்.மதிப்புக் கூட்டும் சேவைகள் எதையும் பயன்படுத்தியிருக்கவே மாட்டேன்.

சரி.இதை இப்படியே சும்மா விடக்கூடாது? என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், எனது செல்போனைத் தவிர, எனது செல் எண்ணின் பயன்பாட்டுப் பகுதியின் மொத்தமும் எனது செல்போன் சேவை நிறுவனத்திடம் தான் இருக்கிறது.எனது சார்பாக,சட்ட அறிவிப்பு அந்த நிறுவனத்துக்குச் சென்றால், நிறுவனத்தின் முதல் வேலையே எனது எண்ணின் மொத்தத் தகவல்ப் பகுதியை அழிப்பதுதான்.அதன் பிறகே நீதிமன்றத்துக்கு நிறுவனப்பிரதிநிதி வருவான்.

கஸ்டமர் கேரில் புகார் செய்ய வேண்டியதுதானே! எனக் கேட்பவர்களுக்கு எனது பதில் ஏளனச்சிரிப்புத்தான் !!!

ஏன் ஒரு ரூபாய் ஒரே இரவில் குறைந்தது? எனக் கேட்டால் போன மாதம் இதே தேதியில் நீங்கள் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினீர்கள்.அதை இப்போதுதான் பார்த்தோம் என்பதுபோன்ற பொறுப்பான பதில் வரும்.(ஒரு எஸ் எம் எஸ்ஸீக்கு ஒரு ரூபாயா?)
திருடியே உலகின் நம்பர் ஒன் பணக்காரன் ஆன நிறுவனம் எனது செல்போன் நிறுவனம்தான்.

அண்ணனும் தம்பியும் சண்டை போட்டால்,இந்தியப் பங்குச் சந்தையே சரிகிறது.முழுமையான நம்பிக்கைக்குரிய என்ற அர்த்தத்தை ஆங்கிலத்தில் தரும் நிறுவனமே எனது செல்போன் சேவை நிறுவனம்.

எனது செல்போன் மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் இப்படி திருடியே கொழுக்கின்றன.
நமக்கு இருக்கும் தினசரிக் கடமைகளில் செல்போன் நிறுவனத்துடன் சண்டைபோடவா நேரம் இருக்கிறது?

ஆனாலும் திருட்டும்,கொள்ளையடித்தலும் தொடர்கிறது.இதே வேலையை தனியார் வங்கிகளும் செய்கின்றன.இந்தியாவில் ஏ டி எம்மை அறிமுகப்படுத்திய பந்தாவான வங்கியானது, மிக மிக நுணுக்கமாக திருடிக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் நிதியமைச்சர் இந்த வங்கியின் மறைமுக சேர்மன் ஆவார்.இந்த வங்கியைப் பற்றி மாதம் ஒரு முறையாவது ஜீனியர் விகடனில் க்ரைம் கட்டுரை வந்துகொண்டே இருக்கிறது.
சரி! இதற்கும் ஆன்மீகக் கடலுக்கும் என்ன சம்பந்தம்?
அநியாயமாக திருடப்படும் பணம் திடீரென அழிந்துவிடும்.அநியாயமாக நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம் திடீரென சர்வநாசமாகிவிடும்.அதை வெகுவிரைவில் பார்க்கத்தான் போகிறோம்.

வாடிக்கையாளரிடம்நன் மதிப்புபெற்ற(உலகின் முதல்) 500 நிறுவனங்களில் எனது செல்போன் சேவை வழங்கும் திருட்டு நிறுவனத்தின் பெயரும் இருக்கிறது.இந்த செய்திநேற்றைய தினகரனில் வெளிவந்தது.
வாசகர்களாகிய நீங்கள் இந்தக் கட்டுரை குறித்து உங்கள் கருத்துக்கள்,அனுபவங்களை தயவுசெய்து எழுதவும்.

4 comments:

  1. ஆம் நீங்கள் சொல்வது பரிபூரண உண்மை நான் ஒரு முறை அல்ல பல முறை இது போல என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் இவர்களை ஒரு நாள் நிச்சயம் தர்மம் நின்று கொல்லும் மக்கள் பணத்தை திருடுபவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.நல்ல பதிவு..

    ReplyDelete
  2. ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என எல்லா தரப்பினரையும் பணத்தால் அமுக்கி வைத்துக்கொண்டு நம்மைப் போன்ற சராசரி மக்களிடமிருந்து தலா ரூ.0.10/-ரூ.1.00/- என திருடிக்கொண்டே இருக்கின்றன.
    இப்படித்திருடுவது ஆளுவோருக்கும்,அரசுக்கும்,பிற செல்போன் கம்பெனிகளுக்கும் தெரியும்.உலக மயமாக்கினால்,பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்.ஏழைகள் மேலும் மேலும் ஏழையாவார்கள் என சுதேசி விழிப்புணர்வு இயக்கம் 20 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்துவருகிறது.எவன் கேட்கிறான்.இப்படி ஒரு ரூபாய் X 3 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் X 365 நாள் என எடுத்துக்கொண்டால் எத்தனை கோடிகளை இந்திய செல்போன் நிறுவனங்கள் திருடும்?

    ReplyDelete
  3. அந்நியன் படம் போலவே இவர்கள் மக்கள் பணத்தை சிறிது சிறிதாக பல பேரிடம் முழுங்குகிறார்கள் இந்த பணம் நிச்சயம் இவர்களின் விடு போய் சேராது அப்படியே சேர்ந்தாலும் வீண் செலவு தான் ஆகும் என்பது விதி.

    ReplyDelete