Saturday, July 31, 2010

தமிழ்நாட்டின் புராதன இந்துக்கலைகளை கற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு

புராதனக் கலைகள் கற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு

தமிழ்நாட்டின் புராதனக் கலைகளான பம்பை,உடுக்கை,உருமி மேளம்,கோலாட்டம்,கும்மி,நாதஸ்வரம்,கொம்புகுழல்,தாரை,தப்பட்டை,திடும்பு,உடும்பு,லவண்டை,பேரிகை உள்ளிட்ட முக்கியமான கிராமீய அபூர்வக் கலைகள் கற்றுத்தர இந்தியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இத்துடன் கோவிலில் பூஜை செய்யும் விதம்,பூஜாரிப் பயிற்சி,மந்திரம் உச்சரிக்கும் முறை,சுவாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யும் விதம்,தேவாரம் திருவாசகம் ஓதுதல் போன்ற பயிற்சிகளும் காமாட்சிபுரி ஆதினம் அவர்களின் ஆசியோடு இந்தியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் வழங்குகிறது.இதுபற்றி மேலும் விபரமறிய திரு.தி.அரங்கநாதன் செல்:98437 16211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரமறிந்து கொள்ளலாம்.
அஞ்சல் முகவரி:
கோவை காமாட்சிபுரி ஆதீனம்
கோளறுபதிக நவக்கிரகக் கோட்டை,
சித்தம்பலம்,
பல்லடம் அருகில்,திருப்பூர் மாவட்டம்.

No comments:

Post a Comment