Tuesday, July 20, 2010

வேகமாக வரும் பணம் வேகமாகவே போய்விடும்;பாகம் 2

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார்.நல்லவர்;படிப்பாளி;மிகச் சிறந்த உழைப்பாளி;பட்டதாரி.சுமார் 12 வருடங்களுக்கு முன்பு அவரும்,அவரது நண்பர்களும் சேர்ந்து அவர்களது சொந்த ஊரிலேயே இருக்கும் ஒரு பாடாவதி லாட்ஜில் ரூம் போட்டார்கள்.(கெட்டதாக நினைக்கவேண்டாம்).அந்த நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டனர்.யார் முதலில் அரசு வேலைக்குச் செல்கிறார்களோ,அவர் பிறருக்கு எப்படி அரசு வேலைக்குச் செல்வது எப்படி என வழிகாட்டிட வேண்டும்.

ந்மது நண்பர் கிராம நிர்வாக அதிகாரி ஆனார்.(விளையாட்டாக இந்திய ஆட்சித்துறைப் பணியில் இரண்டு நிலைகளைத் தாண்டி,நேர்காணல் வரை சென்றார்.தன்னை உணராமலிருந்ததால்,வித்யா கர்வத்தினால் நேர்காணலில் ஜெயிக்கும் சூழ்நிலையிருந்தும் தோற்றுப்போனார்.அரசுப்பணிக்குச் சேர்ந்த சில வருடங்களுக்கு ஒரே அரசுப் பணியில் இராமல்,ஒவ்வொரு அரசுப் பணிக்கான அறிவிப்பையும் பார்த்து,அத்தனைத் தேர்விலும் கலந்து, அத்தனை வேலையிலும் சில மாதங்கள்/சில வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.வருவாய்த்துறை,பத்திரப்பதிவுத்துறை,நகராட்சி நிர்வாகம்,கல்வித்து|றை,பொதுப்பணித்துறை,காவல்துறை என சகலதுறைகளிலும் பணிபுரிந்து இறுதியாக கிராம நிர்வாக அதிகாரியானார்.)
இவரது புத்திசாலித்தனம்,கல்விச்சாதனை,அரசுப்பணியில் மாறிமாறிச் சேரும் லாவகம் பார்த்து பலருக்கு இவரே முன்மாதிரி ஆனார்.சேர்ந்தால் அரசுப்பணியில்தான் சேருவேன்; இல்லாவிட்டால் எந்த வேலைக்கும் போகமாட்டேன் என்ற கொள்கை இவர் வாழும் தெருவில் பல இளைஞர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.அதாகப்பட்டது.பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு,டிகிரி,டிப்ளமோ படித்து முடித்ததும் எந்த வேலைக்கும் போகாமல் நம்ம வி.ஏ.ஓ.மாதிரியே அரசுப்பணிக் கனவில் இருக்கிறார்கள்.

அதன் படி அந்த 6 நண்பர்களும் சில வருடங்களில் ஆளுக்கொரு அரசுப் பணிக்குச் சேர்ந்தனர்.
எல்லோரும் அரசுப் பணிக்குச் சேர்ந்தாலும்,அவர்களின் நட்பு அறுபடவில்லை.குழுவாக சிந்தித்து செயல்பட்டார்கள்.இந்த வெற்றி சூத்திரத்தை இன்னும் பலருக்குக் கொண்டு சென்றால் என்ன என தோன்றியது.
விளைவு ஒரு அகாடமியை ஆரம்பித்தனர்.அகாடமியால் ஒவ்வொரு அரசுப் பணிக்கான தேர்வு அறிவிப்பும் இந்த அகாடமியில் ஏராளமான மாணவர்களைச் சேர வைத்தது.இந்த அகாடமியில் ஒரு நாள் விடாமல் 4 மாதங்கள் வரை பயின்றவர்கள் அனைவரும் அரசுப் பணியில் சேர்ந்தார்கள்.ஒரு கட்டத்தில், அதாவது கி.பி.2005 ஆம் ஆண்டில் இந்த அகாடமியில் பயின்றவர்கள் இல்லாத அரசுத் துறையே இல்லையென்ற அளவுக்கு முன்னேறினார்கள்.

இந்நிலையில் 1.1.1995 ஆம் ஆண்டிலிருந்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா கையெழுத்திட்டது.செல்போன்கள்,இன்டர்நெட்,பன்னாட்டு நிறுவனங்கள்,வெளிநாட்டு கேபிள் டிவி குப்பைகள்,பிஸ்ஸா,கார்ன் பிளேக்ஸ் என இந்தியாவும் அமெரிக்க மயமானது.வலைப்பூக்களும் உதயமானது.இதெல்லாம் வெளித் தோற்ற விளைவுகள்.
மறுபக்கம் மாதம் ரூ.10,000/- சம்பளம் அறிமுகமாகி,இன்று மாதம் ரூ.50,000/-சம்பளம் சகஜமாகிவிட்டது.எல்லோரும் ஐ.டி.எனப்படும் தகவல் தொழில் நுட்பப் படிப்பிற்காக தமது சொத்துக்களை விற்றனர்.ஐடியில் பணிபுரிவது கவுரவம் என பொய்யான புகழுரை எங்கும் பரவியது.தினமும் டைவர்ஸ் கேஸ்கள் எல்லா நகர நீதிமன்றங்களிலும் எகிறின.படுக்கையறைக் காட்சிகள் 1000 நாட்கள் ஓட ஆரம்பித்தன.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை கானல் நீரானது.வேகமாக பணம் சம்பாதிக்கும் எண்ணம் எல்லோருக்கும் வர ஆரம்பித்தது.செல்போனின் பயன்பாடு அதிகரித்ததால்,எய்ட்ஸின் பரவலும் ரேஷனாகியது.

இந்த சூழ்நிலையில்,நமது கிராம நிர்வாக அதிகாரிக்கு கணினி அறிமுகமாகி,இணையக் கடலில் நீந்தத் துவங்கினார்.அவரை ஆன்லைன் ஷேர் மார்க்கெட் என்னும் சுறா விழுங்கியது.ஒரு லட்சத்துடன் இறங்கியவருக்கு சில நாட்களில் இரண்டு லட்சம் லாபம் கிடைத்தது.அப்புறமென்ன. .. ஒரு லட்சம் முதலீடு ஐந்து லட்சமானது; ஐந்து லட்சம் பத்து லட்சமானது; பத்து லட்சம் முதலீடு ஐம்பது லட்சமாகியது.
ஐம்பது லட்சரூபாய் நமது கிராமநிர்வாக அதிகாரியிடம் கிடையாது.தாம் வாழ்ந்து வரும் தெருவில் இருக்கும் தனது அனைத்து சொந்தங்கள்,உறவுகளிடம் கடனாக வாங்கி முதலீடு செய்தது.ஒரே ஒரு ஆளுக்கு ஒரு தெருவே கடன் கொடுத்திருந்தது.மனைவியின் நகைகள் 3 நிமிட வங்கிக் கடனில் பணமானது.
ஐம்பது லட்சத்தை கண்ணுக்குத் தெரியாத கணினி வழியாக முதலீடு செய்ய அதுவே அவரை 2 கோடிக்கு கடனாளியாக்கியது.ஒரு வருடத்தில் அந்த 2 கோடிக் கடனுக்கு ஈடாக,கடன் கொடுத்தவர்களில் முந்தியவர்களுக்கு அவரது வீடுதான் கிடைத்தது.மற்றவர்கள் அவரை இன்னும் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின்படி, இந்த வி.ஏ.ஓ., ஒரு அறிவாளிதான்;படிப்பாளிதான்;ஆனால்,தனிமையாகவே தன்னை மட்டும் பலப்படுத்திவந்திருக்கிறார்.புகழ்ச்சிக்கு மயங்கியிருக்கிறார்.அந்த புகழ் வெளிச்சத்திலிருந்து வெளி வரவே இல்லை.

வெளியுலகில் தெரியும் மாற்றங்கள்,நவீன மோசடிகள்,பித்தலாட்டங்களைப் பற்றி அறியாமலிருந்ததன் விளைவு என்றே எனக்குத் தோன்றுகிறது.நிச்சயம் இவருக்கு அரசுத்துறை சாராத நண்பர்களே இல்லை என்றே சொல்லலாம்.

(நிஜ வாழ்க்கையில் நமது ஊரில் 40 வருடமாக இருக்கும் சந்தாவையும்,அந்த சந்தா நிர்வாகிகளையே நம்ப முடியவில்லை;எப்படி ஒரு கணிப்பொறியையும்,இணைய இணைப்பையும் நம்புவது.)

எப்படியெல்லாம் ஏமாற்றுதல் நடைபெறுகிறது என்பதை அறிய வாரம் இருமுறை வரும் ஜீனியர் விகடன்களை தொடர்ந்து வாசிக்கவும்.அல்லது தினமும் அரைமணி நேரம் ஒதுக்கி தினமலர்,தினகரன்,தினத்தந்தி வாசிக்கவும்.உலகம் எவ்வளவு பெரியது என்பது தெரியும்.

6 comments:

  1. sharemarket is a very good business and a investment product , if enter without knowing basic knowledge will lose all wealth shortly. but there are people earning regularly in sharemarket , many become crorepathi by just investing rs 10,000 in company like infosys and hold for 20+years . if u invest in good company in longterm view u will get handsome return , but many doing sharemarket with lack of knowledge which lead to loss , basic rule to invest: should be own money , should not borrow from others and that amount is used only for investing

    ReplyDelete
  2. வணக்கம். சென்னையை பொருத்தவரை அனைவரும் ஏதாவது ஒரு வழியில் ஏமாறததான் வேண்டும். அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வழியில் ஏமாறதான் செய்கிறார்கள். என்ன செய்வது திருடானாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. மற்றபடி கட்டுரை நன்றாக உள்ளது. நன்றி
    ராஜேஷ்

    ReplyDelete
  3. ராஜன் அவர்களே! தங்கள் கருத்து ஏற்புடையது.அதனால்தான் நமது கட்டுரையின் தலைப்பே வேகமாக சம்பாதிக்கும் பணம் வேகமாகப்போய்விடும் எனக் கொடுத்துள்ளோம்.

    அதே சமயம்,உலகமயமாக்கலின் விளைவே மனித மனங்களில் சீக்கிரம் பணக்காரனாக வேண்டும் என்ற நச்சு எண்ணத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது.என்ன செய்வது?

    ReplyDelete
  4. இது பேராசையினால் விழைந்த அழிவு ஓர் அளவு பணம் வந்தவுடன் வேறு தொழிலுக்கு இவர் சென்று இருக்கலாம் . இக் காலத்தில் பணம் நல்ல வழியில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. திருடாமல், பொய் சொல்லாமல், நேர்மையாக யாரையும் ஏமாற்றாமல் பணம் சம்பாதிக்கலாம் அப்படி சம்பாதிக்கும் பணமும் நல்ல பணமே . ஷேர் மார்க்கெட் என்பது சுது போன்றது எப்ப்போதும் ஏறும் எறங்கும் என்று சொல்ல முடியாது. இது அமெரிக்காவில் ஆரம்பித்த பொது கோடி கணக்ககாண பேர் ஒரே இரவில் பணக்காரர்கள் ஆனர்கள் அதேபோல் சில மாதங்களில் நடு தெருவுக்கும் வந்தார்கள் இதில் நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும். நன்கு தெரிந்தால் மட்டுமே நாம் இதில் இறங்க வேண்டும்.Long Term Investment மற்றும் Short Term Investment என்று இதனை நாம் பிரிக்கலாம் .மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பதிவி இது

    ReplyDelete
  5. உலகமயமாக்கல்,தமிழ்நாட்டில் ஊறுகாய் தயாரிப்புக்குக்கூட வெளிநாட்டுக்கம்பெனிகளுடன் "புரிந்துணர்வு ஒப்பந்தம்" போட்டால்,உள்ளூர் ஊறுகாய் தயாரிப்பாளர்கள் என்ன ஆவார்கள்?இதை எந்த அரசாவது நினைத்ததுண்டா?

    ReplyDelete
  6. கி.பி.1977 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஒரு அமெரிக்க ஒப்பந்தம் போட்டது.அது வர்த்தக ஒப்பந்தம்தான்.எல்லாப் பத்திரிகைகளும் வரிந்துகட்டிக்கொண்டு எழுதின.இனி,அமெரிக்காவின் முதலீட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று! ஆனால்,ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு வந்த தொழில் என்ன தெரியுமா? நீங்கள் உங்கள் நண்பரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போகிறீர்கள்.அங்கே யாருமில்லை;உங்கள் கையிலிருக்கும் ஸ்டிக்கரில் உங்கள் பெயரை எழுதி உங்கள் நண்பரின் வீட்டின் கதவில் ஒட்ட வேண்டும்.இந்த ஸ்டிக்கர் தயாரிக்கும் நிறுவனம் வருவ்தற்குத்தான் இந்திய அமெரிக்க ஒப்பந்தம். சுமார் 30 ஆண்டு கடந்தாலும் இன்றும் இதேபோல்,(இந்தியாவுக்கு)ஒன்றுக்கும் உதவாத உருப்படியில்லாத ,(அமெரிக்காவுக்கு)லாபம் தரும் ஒப்பந்தங்கள் தான் செய்யப்பட்டுவருகின்றன.இந்தியாவும் தனது பலத்தை உணரவில்லை;அமெரிக்காவும் தனது சுயநலத்தை துறக்க வில்லை;

    ReplyDelete