Friday, July 17, 2009


உலக வரலாற்றை மாற்றும் உளவு நிறுவனங்கள்

கி.பி.2010 முதல் உலகில் மூன்று பேரில் ஒருவர் வேறு யாரோ ஒரு மனிதன் அல்லது நாட்டிற்காக அவரை அறியாமலேயே உளவு பார்த்துக்கொண்டிருப்பார்.(உளவு பார்ப்பதும் கொலை செய்வதும் உலக வர்த்தக அமைப்பின் எழுதப்படாத சட்டம்)

ஒவ்வொரு நாடும் தனக்கென இரு உளவு அமைப்புகளை வைத்திருக்கிறது.ஒன்று உள்நாட்டில் அந்த அரசாங்கத்தின் எதிரிகள்,தீவிரவாத அமைப்புகள்,தீவிரவாதிகளைப் பற்றி முழுமையாக அறிய=இது உள் நாட்டு உளவு அமைப்பு.

மற்றது வெளிநாட்டு உளவு அமைப்பு:நமது எதிரி நாடுகள் மட்டுமல்ல, நமது நட்பு நாடுகளும் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறது? எப்படி அரசியல் வியூகம் வகுக்கிறது? என்பதைப்பற்றியும் அறிய வேண்டியது இதன் வேலை.
நம் நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பு ரா என்ற ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்
நம் நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பு ஐ.பி. என்ற இன் டலிஜன்ஸ் பீரோ

உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவின் வெளிநாட்டு உளவு அமைப்பின் பெயர் சி.ஐ.ஏ. என்ற சென் ட்ரல் இன் டலிஜென்சி ஏஜன்சி

இதுசுமார் 1,00,000 வெளிநாட்டுக்கட்சிகள்,ஆளும் அரசுகள்(மாநில அரசுகள்),தொண்டுநிறுவனங்கள்,கட்டுமான நிறுவனங்கள்,கப்பல் நிறுவனங்கள்,வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் பற்றி பின் தொடர்ந்து தகவல் சேகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இதன் சேட்டைகளைப்பார்த்தால் நீங்களே மலைத்துப்போவீர்கள்।இந்த வருடம் யார் உலக அழகிப்போட்டியில் ஜெயிப்பது? கச்சா எண்ணெயை இந்தவாரம் என்ன விலைக்கு விற்பது? எந்தநாட்டில் எந்த கட்சி ஆளும் கட்சியாவது? எங்கு கலவரத்தை உருவாக்குவது? எந்தநாட்டை மூன்று அல்லது நான்கு துண்டாக உடைப்பது? அமெரிக்காவிற்கு எதிராக எந்தெந்த நாடுகள் செயல் படுகின்றன? எந்தெந்த வெளிநாட்டுப்பிரதமர்களைக்கொல்வது?யாரை வைத்துக்கொல்வது?ஒலிம்பிக் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்வது,ஆந்த்ராக்ஸ்,பன்றிக்காய்ச்சலைப் பரப்புவது, அமெரிக்காவின் எதிரிகளைக் கொல்லுவது,தனது நாட்டுமக்களின் மினஞ்சல்களைத் திருடுவதும் உளவுபார்ப்பதும்,வேற்றுக்கிரகமனிதர்களுடன் அமெரிக்க ராணுவம் போர் ஒத்திகைபார்க்கிறது என பொய் சொல்வது,அமெரிக்காதான் உலகின் பாதுகாப்பான நாடு என அள்ளி விடுவது, ஐ।டி।தொழிலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வைத்தது । । .
உலகின் மிகப்பெரிய அலுவலகம் அமெரிக்காவில் உள்ள சி.ஐ.ஏ. அலுவலகம்தானாம்.இங்கு 26,000 பேர்கள் பணிபுரிகிறார்கள்.இவர்களுக்கு என்று தனி சாட்டிலைட்கள்,செல்போன்,விமான சேவை,கப்பல்கள்,ராணுவம்,வங்கி,உலகளவில் முகவர்கள்,வானொலி சேவை உண்டு.

சி.ஐ.ஏ.வரலாற்றில் அரசியல் சாராமல் ஒரு இயக்கத்தைப் பற்றி ஆராய பின் தொடர அதன் கொள்கை முடிவுகளை மாற்றிட ஒரு தனி அலுவலகம் தொடங்கி உள்ளது.அது என்ன அமைப்பு தெரியுமா? அது தான் ஆர்.எஸ்.எஸ்.

கி.பி.1998 ஆம் வருடம் நாம் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்தோம்.கடைசி விநாடி வரை இந்த அணுகுண்டு சோதனையை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை.ஏன்? ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்.
ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்ஸின் எழுச்சி இந்து தர்மத்தின் எழுச்சி என்பதை நாம் சிறிதும் உணரவில்லை.சி.ஐ.ஏ. முழுமையாக உணர்ந்துள்ளது.

No comments:

Post a Comment