Friday, July 31, 2009

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்-4

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-4

கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.

ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர்.

வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.இவரது ஜீவ சமாதி எங்கு இருக்கிறது எனத்தெரியவில்லை; திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார்.இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார்.
சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது.

ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார்.
ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி
ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு.

இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார்.

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி ,மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும்.அன்னதுவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார்.இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார்.
ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும்.
மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும்.

இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர்.
திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!

இந்தத்தகவல்களைத் தந்திருப்பது:சிவமயம் கண்ட சித்தர்கள்,ஆசிரியர்: கானமஞ்சரி சம்பத்குமார்।இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை।விலை ரூ।140/-।மிக அற்புதமான தமிழ் புத்தகம்.

7 comments:

  1. http://www.visvacomplex.com/SiddhargaL_Oru_Parvai.html

    இதில் மேற்கொண்டு சில விவரங்கள் உள்ளன.

    http://www.visvacomplex.com/main.html

    இது ஒரு ஆன்மீக தகவல் பொக்கிஷம்.

    ReplyDelete
  2. உங்கள் பிளாக் மிகச் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    அன்புடன்
    - ரமணன்
    http://ramanans.wordpress.com/

    ReplyDelete
  3. நல்லது. இவையெல்லாம் அகஸ்திய விஜயம் என்ற நூலில் மாதா மாதம் வருபவை. இவர் அவற்றைத் தொகுத்து புத்தகமாக எழுதியிருக்கிறாரோ? அகஸ்திய விஜயம் ஒரு ஆன்மீகப் பொக்கிஷம்.

    ReplyDelete
  4. அகஸ்திய விஜயம் மாத இதழ் ஆன்மிகத் தேடல் இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

    ReplyDelete
  5. வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) is at Singampunari a wonterfull temple is there.

    ReplyDelete
  6. புதுக்கோட்டைக்கு அருகில் அரிமளத்தில் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது. மாதம் தோறும் தேய்பிறை தசமி திதியில் ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.
    geniusakv@gmail.com

    ReplyDelete
  7. கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய http://spiritualcbe.blogspot.in

    Saravanakumar.B

    ReplyDelete