Saturday, July 15, 2017

மஹாகால பைரவ உலகம்


உலகங்களில் நாம் வாழ்ந்து வருவது மட்டுமே கர்மலோகம் ஆகும்;இங்கே நிறைய புண்ணியச் செயல்கள் செய்தால்,இறந்தப் பின்னர் அதற்கு தகுந்தாற்போல இந்த கர்மலோகத்திற்கு மேலே இருக்கும் ஏழு புண்ணிய உலகத்தில் ஏதாவது ஒரு உலகத்திற்குச் செல்வோம்;அங்கே சகல சுகபோகங்களையும் குறிப்பிட்ட காலம் வரை அனுபவிப்போம்;பிறகு,மீண்டும் இந்த பூமியில் செல்வந்தராக பிறப்போம்;

இங்கே ஆடாத ஆட்டங்கள் ஆடினால்,மரணத்திற்குப் பிறகு இந்த கர்மலோகத்திற்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகத்திற்கு அனுப்பப்படுவோம்;அங்கே உரிய தண்டனைகளை அனுபவித்துவிட்டு மீண்டும் இதே கர்மலோகத்தில் பரம ஏழையாக பிறக்க வேண்டும்;


இதே போல சிவலோகம்,விஷ்ணு லோகம்,கோ லோகம்,முனி லோகம்,வராகி உலகம்,பைரவ உலகம் என்று பலவிதமான உலகங்கள் இருக்கின்றன;


பிறந்த குழந்தைகளுக்கு நாய் வடிவத்தில் அரைஞாண்கயிறு அல்லது தாயத்து கட்டும் பழக்கம் பாரதம்,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,பங்களாதேஷ்,மியான்மர்,நேபாளம்,திபத்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது;


நம் ஒவ்வொருவருக்கும் துணிச்சல் என்ற உணர்வாக இருப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!ஈசனாகிய சிவபெருமான் ஒரு போதும் அவதாரம் எடுப்பது இல்லை;தேவைப்படும் போது தமது சக்தியில் ஒரு பகுதியை வெளிப்படுத்துவார்;அவர் தான் மஹா கால பைரவப் பெருமான்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக பல மகான்கள் பைரவ உபாசனை மிகவும் கடினம் என்பதை உணர்ந்துள்ளார்கள்;அதனால்,அவர்கள் மிகவும் சுலபமான ஒரு வழிமுறையைக் கையாண்டார்கள்;


மாயம்மா,ஷீர்டி சாய்பாபா,ரமண மகரிஷி,சேஷாத்திரி மகரிஷி மற்றும் பல ஆயிரக்கணக்கான சாமியார்கள்(உதாரணமாக வெள்ளை வேட்டி சாமிகள்,புண்ணாக்கு சுவாமிகள்) தினமும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவிடுவதை ஒரு முக்கியமான கடமையாக செய்து வந்தார்கள்;அப்படிச் செய்து வந்தமையாலேயே மஹா கால பைரவப் பெருமானின் ஆசிகளையும்,அட்டமாசித்துக்களையும் பெற்றார்கள்;

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி வரும் இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் வந்தார்கள்;அப்படி வரும் போது மஹாகால பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவு இட்டார்கள்;இவைகள் அனைத்தும் கடந்த 17 ஆண்டுகளில் ஆன்மீகத் தேடல்களோடும்,பலவிதமான பைரவ வழிபாடு பற்றிய பழமையான ஓலைச்சுவடிகளை வாசித்தும்,நாடிகள் கண்டும்,ஆன்மீக வழிகாட்டிகளிடம் பணிந்தும் குரு உபதேசமாகப் பெற்றவைகளை சில வரிகளில் உங்களுக்கு கொடுத்திருக்கின்றோம்;


ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளும்,தை மாத செவ்வாய்க்கிழமைகளும் பைரவ வழிபாடு மற்றும் வராகி (சமஸ்க்ருதத்தில் வாராஹி) வழிபாட்டிற்கு ஏற்றது;


ஹேவிளம்பி வருடத்தின் ஆடிச் செவ்வாய்க்கிழமைகள்;

18.7.2017
25.7.2017
1.8.2017
8.8.2017
15.8.2017(ஆடி மாதத் தேய்பிறை அஷ்டமி)


இந்த நாட்கள் முழுவதும் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அனைத்து சன்னதிகளையும் வழிபட்டுவிட்டு,முடிவாக கால பைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்துவரவேண்டும்;சிகப்பு நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;இம்முயற்சியை எல்லோருக்கும் தெரிவித்து செயல்படுத்துவது தவறு;

வசதி உள்ளவர்கள் இந்த நாட்களில் வரும் குளிகை காலத்தில் (மதியம் 12 முதல் 1.30) அபிஷேகம் செய்யலாம்;பூசாரிக்கு அவர் மனம் குளிரும் விதமாக குருதட்சணை தருவது அவசியம்;    இயலாதவர்கள் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;இந்த நாட்களில் குறைந்தது எட்டு தெரு நாய்களுக்கு பிஸ்கட்,ரொட்டி போன்ற உணவுகளைத் தர வேண்டும்;(வளர்ப்பு நாய்களுக்கு இது பொருந்தாது)


சில ஊர்களில் ஊருக்கு வெளியே தனித்த பைரவர்கள் அநாமதெயமாக இருக்கின்றார்கள்;அவர்களுக்கு சிவலிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்வோமோ அதே போல அவருக்கு அபிஷேகம் செய்யலாம்;(அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் தான் பலன் உண்டு)
சந்தர்ப்பம் அமையும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாட்களில் இரவுப் பொழுதில் திரு அண்ணாமலை கிரிவலம் வரலாம்;


வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நாட்களில் மஹா கால பைரவப் பெருமானின் அட்ட வீரட்டானங்களுக்குப் பயணம் செய்யலாம்;

1.தஞ்சாவூர் அருகில் இருக்கும் திருகண்டியூர் ப்ரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில்

2.பண்ருட்டி அருகில் இருக்கும் திருஅதிகை 

3.மயிலாடுதுறை அருகில் இருக்கும் திருப்பரசலூர்  

4.திருக்கடையூர் மற்றும் திருக்கடையூர் மயானம் 

6.மாயவரத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் வழுவூர் பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்

7.திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி

 8.மயிலாடுதுறையில் இருந்து மணல் மேடு செல்லும் சாலையில் இருக்கும் குறுக்கை 

9.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வாழும் சிதம்பரம்


கர்மவினைகளை நீக்கும் முதல் கடவுளும்,ஜோதிடர்களின் முதல் தெய்வமுமாகிய மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுவோம்;


காலத்தை வரையறுத்துத் தந்த ஸ்ரீவாரதாரகர் சித்தரை உபாசனை செய்துதான் ஆர்யபட்டரும்,பாஸ்கராச்சாரியாரும் அழியாத புகழ் பெற்ற ஜோதிட நூல்களை எழுதினார்கள்;


ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment