Monday, January 30, 2017

ஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 2


மனித இனம் நாகரீகமடைந்து 20,00,000 ஆண்டுகள் ஓடிவிட்டன;நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாம் வாழ்ந்து வரும் தகவல் தொழில் நுட்பக் காலத்தில் தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இப்படி அதிகரித்துக் கொண்டே செல்வதற்குக் காரணம்,மெக்காலே கல்வித் திட்டமும்;நமது பாரம்பரிய உணவுகளின் பெருமைகளை நாம் அறியாமல் இருப்பதுமே! இதற்குப் பின்னால் சர்வதேச உணவு அரசியல் இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் ஏராளமான வெடிமருந்துகள் மீதம் இருந்தன;லட்சக்கணக்கான போர் வீரர்கள் படுகாயமடைந்திருந்தனர்;இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையே இன்றைய அலோபதி மருத்துவம்.இந்த மருத்துவமுறையானது இன்று விபத்துக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே அருமருந்தாக இருக்கிறது.


எந்த ஒரு நோயாக இருந்தாலும்,அந்த நோய்க்கிருமிகளை மேலும் வளரவிடாமல் செய்யும் விதமாகவே அலோபதி மருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன;அதேசமயம்,அந்த அலோபதிமருந்துகளால் நோய்கள் குணமடைவது மிகக் குறைவு;அப்படியே குணமானாலும் நோய்க்கிருமிகளை வெளியேற்றுவதில்லை;இதனால் தான் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன;


மனித உடலுக்கு ஒரு இயல்பு சுபாவம் உண்டு;எந்த ஒரு நோய் வந்தாலும் அதை நீக்கி,தன்னைத் தானே பாதுகாக்கும் சக்தி உண்டு;இந்த கருத்தின் அடிப்படையில் தோன்றியவையே நமது பாரம்பரிய மருத்துவமுறைகளாக ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்;இன்றும் ஆயுர்வேதமும்,சித்த மருத்துவமும் மனிதர்களை நோய்களில் இருந்து காப்பாற்றுவதோடு முழு ஆரோக்கியத்தையும் வழங்கிவருகிறது.

ஒரு நோய் வந்தால் அந்த நோயின் தீவிரத் தன்மையை அறிய நாடி பார்த்தப் பின்னரே உரிய மருந்துகளைத் தயார் செய்வது சித்த மருத்துவம்.பெரும்பாலான சித்த மருந்துகளை சாப்பிடும் காலங்களில் பத்தியம் இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் தான் சித்த மருந்து உடலில் செயல்பட்டு,நோயைக் குணப்படுத்தும்;பத்தியம் இருப்பதன் மூலமாக சித்த மருந்துகள் உடலுக்குள் செயல்பட நாம் வழிவகுக்கிறோம்.


ஆயுர்வேத மருத்துவமுறையில் அப்படி இல்லை;பத்தியம் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டு வந்தாலும் நோய்களைக்  குணப்படுத்திவிட முடியும்;
இயற்கை நலவாழ்வு மருத்துவமுறையில் அதுவும் இல்லை; உணவுகளை தினமும் முறையாகச் சாப்பிட்டு வந்தாலே முற்றிய நோய்களைக் கூட குணப்படுத்த முடியும்.சமைத்த உணவை விடவும் இயற்கை உணவு நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது;ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நோய்களை உடலில் இருந்தே வெளியேற்றுகிறது;உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது;

  இயற்கை நலவாழ்வு முறைகளை முறையாக பின்பற்றி குணமானவர்கள் நமது பாரத நாட்டில் ஏராளமானவர்கள் இன்றும்  வாழ்ந்து வருகிறார்கள்;இங்கிருந்து ஜெர்மனியில் குடியேறிய இந்தியர்களின் சைவ உணவுப்பழக்கத்தை அறிந்த ஜெர்மன்  ஆராய்ச்சியாளர்கள்  1987 முதல் 1997 வரை ஆய்வுகள் மேற்கொண்டனர்;அதன்படி வெஜ்ஜி க்யூர் என்ற மருத்துவமுறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்;அது நமது மருத்துவமுறையின் ஜெர்மன் வடிவம் ஆகும்;ஆதாரம்:கல்கண்டு பக்கம் 34,35;வெளியீடு 12.2.1998


வெஜ்ஜிக் க்யூரை ஜெர்மனியில் உள்ள பேராசிரியர் ரெச் ஹெம்மர் தலைமையிலான சத்துணவு ஆய்வு நிலையத்தினர் கார்ல்ஸ்ரு பகுதியில் இருந்தவாறு ஆராய்ந்து கண்டறிந்தனர்.காய்கறிகளிலும்,பழங்களிலும் மிக முக்கியமான பீட்டா கரோட்டினாய்ட்ஸ் என்னும் வண்ணப் பொருள் இருக்கிறது.இந்தப் பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாக உருமாறுகிறது என்பதை கண்டறிந்தனர்;இது உடலின் எந்தப்பாகத்திலும் இருக்கும்/உருவாகும் நோய்க்கிருமிகளைக்கண்டறிந்து வெளியேற்றுகிறது;இந்த மஞ்சள் நிறப் பொருள் காரட்,தக்காளி,மிளகு,பச்சைக்கீரை,முட்டைக்கோஸ்க் கீரை, போன்றவற்றில் நிறையக் காணப்படுகிறது.


இந்த உண்மையை நிரூபிக்க தினமும் இரண்டு கோப்பை தக்காளிச் சாறு அருந்தவைத்தார்கள்;இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்தது;காய்கறிகளை பச்சையாக அல்லது குறைவான அளவில் வேக வைத்துச் சாப்பிடுவதன் மூலமாக இந்த நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கிறது என்பதையும் கண்டார்கள்.


மறுபுறம் இரண்டாம் உலகப் போரில் மீந்து போன வெடிமருந்துகளை ரசாயன உரங்களாக மாற்றினர் ஐரோப்பிய நாட்டினர்.விவசாய நாடான நமது பாரத நாட்டிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர்;அந்தத் திட்டத்திற்குப் பெயர்தான் பசுமை புரட்சி.அதன் விளைவாக நமது நாட்டில் விவசாய உற்பத்தி அபரிதமாகப் பெருகினாலும்,அடுத்த 30 ஆண்டுகளில் பாரத நாட்டு ஆண்களின் ஆண்மைத் தன்மை குறையத் துவங்கியது;பெண்களின் தாய்ப்பாலில் கூட ரசாயன உரங்களின் தாக்கம் பலமடங்கு அதிகரித்து,தாய்ப்பால் கூட நஞ்சாகியது;


தற்போதுதான் இயற்கை விவசாயம் மெல்ல மெல்ல நமது நாட்டில் மீண்டும் உயிர்ப் பெறத் துவங்கியிருக்கிறது.வடகிழக்கு மாநிலங்களில் அரசாங்கமே இயற்கை விவசாயத்தை அங்கீகரிக்கத்  துவங்கியிருக்கிறது.பூடான் நாடும் இதை உணர்ந்திருக்கிறது.தமிழ்நாட்டில் கோ.நம்மாழ்வர் என்ற விவசாய சித்தர் இயற்கை விவசாயத்தின் அருமை பெருமைகளை பரப்பத் துவங்கி,நாம் ஒவ்வொருவருமே இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரத் துவங்கியிருக்கிறோம்;ரசாயன உரங்களின் கொடூரங்களையும் புரியத் துவங்கியிருக்கிறோம்.கி.பி.1700 முதல் கி.பி.2014 வரையிலான கால கட்டத்தில் மட்டுமே நமது நாட்டின் பாரம்பரிய விவசாய முறையான இயற்கை விவசாயம் மேல்நாட்டு வியாபாரத் தரகர்களால் மறக்கடிக்கப்பட்டது;

எப்படி நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பது?

நாம் சாப்பிடும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது?என்பதை உணர்ந்து கொண்டாலே நமது ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும்.
நாம் சாப்பிடும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்படுவதன் மூலமாக வயிற்றில் சுலபமாக ஜீரணமாகிவிடும்;அள்ளி அள்ளிச்  சாப்பிட்டு பற்களால் அரைக்கப்படாத போது வயிற்றுக்கு அதிகமான வேலைப்பளுவை நாம் தருகிறோம்;நாம் சாப்பிடும் உணவானது சீரணிப்பதற்கு வாய் வழியாக இரைப்பைக்கு வருகிறது.இரைப்பையில் உள்ள ஹைட்ரோகுளோரிக் ஆசிட் அதை கூழாக்குகிறது;பிறகு,சிறுகுடலுக்கு அனுப்புகிறது;இரைப்பையில் கூழானப்பின்னரும் ஏதாவது ஒரு உணவுப்பொருள் சீரணமாகாமல் இருந்தால்,அதை சிறுகுடல் சீரணிக்கிறது.அவ்வாறு சீரணிக்க கணையம்,பித்தப்பை,கல்லீரல் உதவுகிறது.தினமும் குளித்து முடித்து குறைந்தது 30 நிமிடம் கழித்தே சாப்பிட வேண்டும்;அதே போல சாப்பிட்டு விட்டு குளிக்க விரும்பினால் இரண்டரை மணி நேரம் கடந்தப்  பின்னரே குளிக்க வேண்டும்;

ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது உணவுடன் உமிழ்நீர் கலக்க வேண்டும்;அப்படி கலந்து அதன் சுவையை நாம் உணர வேண்டும்;அப்படிச் சாப்பிட்டால் மட்டுமே தொண்டையில் இருக்கும் டான்சில் வேலை செய்யும்;உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் நமது நாடு முதலாளித்துவ நாடாக மாறிவருகிறது.இதன் தாக்கம் நமது ஒவ்வொரு வேளை உணவு உண்பதையும் பாதிக்கிறது;எனவே,நம்மில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு வேளை உணவையும் ‘வேகவேகமாக’ சாப்பிடுகிறோம்;இதனால் என்ன சுவையைச்  சாப்பிடுகிறோம்? என்பதை நாம் உணர்வதில்லை;நமது நாக்கும் அறிவதில்லை:இந்தப் பழக்கம் சில ஆண்டுகள் தொடர்ந்தாலே டான்சில் செயலிழந்து விடுகிறது.பிறகு ஆங்கில மருத்துவர் ஆலோசனைப்படி டான்சில்லை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கிவிடுகிறோம்;வெகுவேகமாக செத்தும் போகிறோம்;ருசியறியாமல்!

நாம் உண்ணும் உணவை நாக்கு,இரைப்பை,சிறுகுடல் இம்மூன்றுமே ‘சக்தி’யாக மாற்றுகிறது.70 நாட்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட உணவு, 7 விதமான தாது நிலைகளாக உருமாறி,உருமாறி இன்று சுக்கிலமாக(ஆண்களுக்கும்)வும்,சுரோணிதமா(பெண்களுக்கும்)வும் மாறுகிறது.இவற்றின் கெட்டித்தன்மை மற்றும் துடிப்புத் தன்மையே நம்மை ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு விஷயங்களில் கவனிக்கும் திறனைத் தருகிறது.உடலின் நோய் எதிர்ப்புத் திறனாகச்  செயல்படுகிறது.திடீர் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் போது தாக்குப்பிடிக்கும் திறனாக வெளிப்படுகிறது.உடலின் இளமைத் தன்மை,கவர்ச்சி,வசீகரிக்கும் காந்தசக்தியாக இயங்குகிறது.பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நமது உடலில் உருவாகும் இயல்பான “ரொமான்டிக்” உணர்ச்சிக்கு தாம்பத்தியம் மட்டுமே தீனியாக இருக்கிறது.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நம் நாடு முழுக்க பரவிவிட்ட “டிஸ்பிளே மோகினி” 18 வயது முதல்  58 வயது வரை படிப்படியாக வாழ்ந்து அனுபவிக்க வேண்டியதை ஒரே ஆண்டில் ஆடித் தீர்ப்பதால் 21 வயதிற்குள்ளாகவே “தேஜஸ்”ஸை இழந்துவிடுகிறோம்;ஆரோக்கியத்தை நாமே சீரழித்தும் கொள்கிறோம்.


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி    அருளுடன்!!!


No comments:

Post a Comment