Monday, March 18, 2013

உலகை ஆளவரும் இந்தியா!!!

பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 
மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 'வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020-ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008-ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.                       ஆன்மீகக்கடலின் கருத்து: எங்கே ஆசிய நாடுகளான இந்தியாவும்,சீனாவும் உலக வல்லரசாகிவிட்டால்,நமது நிலை என்னாகுமோ? என்று இன்றைய வல்லரசுகள் அஞ்சுவது நிஜம்.எனவே தான் அவை சீனாவிடம் பேராசையைத் தூண்டிவிட்டு,சீனாவை இந்தியாவுக்கு எதிராக போர் செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

2 comments:

  1. உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா

    ReplyDelete
  2. உசுப்பேத்திவிட இது ஒன்றும் சினிமா அல்ல;உடம்பை ரணகளப்படுத்திட இந்தியா ஒன்றும் வடிவேல் அல்ல;நிரூபணமாக இருக்கும் நிஜம்.பிரசவ வலியின் உச்சத்தில் தான் குழந்தை பிறக்கும்;அதே போல இந்து தர்மத்தின் பெருமைகளை இந்துக்கள் அனைவரும் உணர்ந்தால் மட்டுமே இந்தியா வல்லரசாகும்;இந்து தர்மம் உலகை ஆளத் துவங்கும்;இந்து தர்மத்தின் தொப்புள்கொடி தமிழ்ப்பண்பாடுதான்!!! சும்மா எதையாவது குறை சொல்வதை விடுங்கள்;

    ReplyDelete