Saturday, May 29, 2010

உங்கள் குழந்தையிடம் வாரம் ஒரு முறை மனம்திறந்து பேசுங்கள்


மனநலத்தை அலட்சியம் செய்யும் பாரதநாடு

கி.பி.2015 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தால் உருவாகும் நோயாளிகளில் முதலிடம் நமது இந்தியாவுக்குத்தான் கிடைக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.ஆதாரம் ஜீனியர் விகடன் 2008.

ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள்.இந்த மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன.மொத்தம் ஆறு குழந்தைகள்.
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீதம்,இந்த மூன்று குடும்பத்தின் அத்தனை பேரும் திரைப்படம் ஒன்றுக்குச் செல்லுகின்றனர்.படம் பார்த்துமுடிந்ததும்,அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று இரவு 7 மணிவரை அரட்டை,பரஸ்பரம் மகிழ்ச்சி,சாதனை,குடும்பப்பிரச்னை மற்றும் அலுவலகப்பிரச்னையை இந்த ஒரு மாதத்தில் சமாளித்த விதம் இவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுகின்றனர்.
இந்த பொழுதுபோக்கினை அவர்கள் குடும்ப செயற்குழுக்கூட்டம் என்றே அழைக்கின்றனர்.இதை கடந்த 9 வருடங்களாக தொடர்ந்துநடத்துகின்றனர்.
இந்த ‘குடும்ப செயற்குழு’ கூட்டத்தை தனது குழந்தைகளும் பெரியவர்களானபின்னரும் செய்யுமளவுக்கு உணர வைத்துள்ளனர்.
கி.பி.1960களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி,15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மகன்களுடன் செலவிடுவதை ஒரு ‘கடமை’யாகவே வைத்திருந்தார்.(நன்றி:திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு)அன்று முழுவதும் அவர் தனது மகன்களுடன் விளையாடுவார்.(தனது எதிர்கால வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகிக்க இரண்டு நிர்வாக சாணக்கியர்களை உருவாக்கினார்)
அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்ததும் சிற்சில மனோதத்துவ பரிட்சைகள் வைப்பார்;பணத்தின் மதிப்பு,அதை எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும்;அதை தவறாகப்பயன்படுத்தினால் அதன் முடிவு என்னாகும்? மனித உறவு என்றால் என்ன? என பலவிதங்களில் தனது வாரிசுகளை உருவாக்கினார்.
இன்று ரிலையன்ஸ் குழுமங்கள் இரண்டு மாபெரும் வியாபார சாம்ராஜ்ஜியமானாலும்,இந்திய அரசின் அமைச்சரவையை தனது இஷ்டத்திற்கு வளைக்குமளவுக்கு வளர்ந்துவிட்டனர்.
நாம் நமது குழந்தைகளுக்காகத்தான் வேலைக்குப்போகிறோம்; அல்லது அரசு வேலை பார்க்கிறோம்;அல்லது தொழில் செய்கிறோம்;

எத்தனை முறை ஒரு நாளுக்கு நாம் நம்முடைய மகன் அல்லது மகளிடம் மனம் விட்டுப்பேசுகிறோம்?
ஆனால்,அவர்களுக்காகத்தான் பள்ளி/கல்லூரி கட்டணம் கட்டுகிறோம்?
பிஸி, பிஸி,பிஸி . . . எப்போதும் பிஸி, எப்போதும் பணத்தின் பின்னாலேயே ஒடுகிறோம்; ஓடுகிறோம்; நமது பரம்பரையை பண்புள்ளவர்களாக மாற்றிட,நமது மகன்/மகளின் மனநிலை,சுபாவம்,நடத்தை,பழகும் நட்புவட்டம் பற்றி எதுவும் நாம் அறிவதில்லை;

மனம் விட்டுப்பேச ஒரு குடும்ப உறவு இல்லாததால்தான்,நமது மகள்கள் பருவமடைந்ததும் தனது காமத்துணையுடன் ஓடிப்போகிறது.
தனது கஷ்டங்களை கொட்டிட ,தலையை கோதிவிட ஒரு ஆத்மார்த்தமான உறவு நமக்கே இல்லையே? நாமாவது இன்று முதல் நமது குழந்தைகள்/சகோதரர்கள்/சகோதரிகளுக்காக ஆத்மார்த்தமான உறவாக இருக்கலாமே!!!

(மனதார்ந்த ஒரு உறவு, நம்மிடம் மனம் விட்டுப்பேசாவிட்டால்,நமது வாரிசு காமரீதியான உறவிடம் அடிமையாகிவிடும் என்று மனோதத்துவம் கூறுகிறது.

சரி, அந்த காமரீதியான உறவு டாக்டர் பிரகாஷ் ரேஞ்சுக்கு இருந்தால் என்னவாகும்? நமது வாரிசின் நிர்வாணப்படம் அல்லது வீடியோ இணையத்தில் உலகம் முழுக்க பரவிக்கொண்டே இருக்கும்.இந்த குற்றம் ஒரு குற்றமாகவே நமது வாரிசுக்குத் தெரியாது.நமக்கோ பரம்பரை அவமானமே!)

No comments:

Post a Comment