Monday, May 31, 2010

கேரள மணப்பெண் வேண்டுமா?

கேரள மனைவி வேண்டுமா?





நாமக்கல் பகுதியில் கவுண்டர்கள் அதிகம் வாழ்ந்துவருகின்றனர்.இங்கு வரதட்சணை ரொம்ப அதிகம்.இதனால் 1980 களில் சர்வசாதாரணமாக பெண் சிசுக்கொலைகள் நடந்தன.விளைவு?

தற்போது திருமணத்திற்கு மணமகள் கிடைக்கவில்லை;

இந்நிலையில் சில திருமணத்தரகர்களால்,கேரளப்பெண்களை நாமக்கல் இளைஞர்கள்,முதியவர்களுக்கு திருமணம் செய்யும் போக்குதுவங்கியது.




கேரளத்தினர் தனது மகளை பெண் தரும் முன்பு,

மாப்பிள்ளைக்கு ஹெச்.ஐ.வி.இல்லை என்ற மருத்துவச்சான்றிதழும்,ஓரளவாவது வசதியானவர் என்ற இரண்டைமட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

இதனால்,நாமக்கல் பகுதியே கேரளத்து மருமகன்கள் நகரமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

கேரளாவினர் தனது மகளைத் தருவதற்கு மேலும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.திருமணம் கேரளாவில்தான் நடைபெற வேண்டும்.திருமணம் முடிந்ததற்கான ஆதாரத்தை(திருமணப்பதிவினை) கேரளாவின் காவல்துறை,வருவாய்த்துறை,மகளிர் மேம்பாட்டுத்துறைக்கெல்லாம் அனுப்பிய பின்பே தனது மகளை புகுந்தவீட்டிற்கு அனுப்பிவைக்கின்றனர்.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும்,இன்றைய பெற்றோருக்கு தனது மகன்/மகளுக்கு ஓரளவாவது ‘சரிப்பட்டுவரும்’ வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சாமர்த்தியம் இல்லை;

திருமணத்தரகர்களின் வாய்ச்சவடலாலில் ஏமாந்துவிடுகின்றனர்.அல்லது உறவினர்களின் பேச்சைக்கேட்டு தனது வாரிசின் வாழ்வில் கல்லைத்தூக்கிப் போட்டுவிடுகின்றனர்.

கோர்ட்டுக்கு வராமலேயே பிரிந்து வாழும் இளம்தம்பதியினர்தான் எத்தனை லட்சம் தெரியுமா?



ஒவ்வொரு தம்பதியினரின் வாழ்விலும் மகா சோகம். . .

தமிழ்நாட்டின் எல்லா ஜாதியிலும் இந்த நிலை தொடருகிறது.



எனவே, ஒரு நாமக்கல் திருமணத்தரகரின் முகவரியை எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக தருகிறோம்.



கேரளாதமிழ்நாடு திருமணத் தகவல் சேவை

158 தண்டபாணி ஜெராக்ஸ் & பில்டிங் முதல் மாடி,

மணிக்கூண்டு,நாமக்கல்-1.

செல் எண்:90473 00213,90256 31141.

திருமணத்தரகர்: முருக ரவி

ஆதாரம்:ஜீனியர் விகடன் 2.6.2010;பக்கம் 42,43,44.


No comments:

Post a Comment