Monday, October 26, 2009

கணிப் பொறிக் கல்வி

கணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்


கம்யூட்டர் படித்தால் மாதம் ரூ.50,000/-சம்பளம் என தமிழ்நாடு முழுக்க விளம்பரப்போஸ்டர்களை ஆண்டு முழுக்க ஒட்டித்தீர்த்து கம்யூட்டர் படிக்க ஏராளமான கணினி நிறுவனங்கள் அழைக்கின்றன.இது மிகவும் நல்ல விஷயம் தான்.ஆனால் மாதம் அல்ல வாரம் ரூ.50,000/- சம்பாதிப்பது யாரெனில் இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள்தான்.இதுகூட தப்பில்லை.இந்த பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் நடத்துபவர்களுக்கு 95% ராகு மகாதிசை நடக்கும்.நிர்வாகச்செலவு 30% மட்டுமே.லாபம் 70%.ஏற்றுமதியில் கூட இவ்வளவு லாபம் கிடைக்காது.ஆனால்,இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள் சொல்லும் பொய்யால் எத்தனைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது யாருக்குத் தெரியும்?

இதில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவ மாணவிகள்,அவர்களின் பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?
முதலில்,
இரண்டு மாதங்களுக்கு தட்டச்சு எனப்படும் டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ளவேண்டும்.(டைப்ரைட்டிங்கில் இருக்கும் கீ போடும் கணிப்பொறி கீபோடும் ஒரே விதமான வடிவமைப்புதான்)ஆங்கிலத்தை பாரா பாராவாக சிறு பிழையின்றி டைப் செய்யும் திறமை வந்தபின்னர் (டைப்ரைட்டிங் படிப்பில் தேர்வு அவ்வளவு அவசியமில்லை.அரசுப்பணியில் சேருபவர்கள் மற்றும் ஸ்டெனோடைப்பிஸ்டு வேலைக்கு மட்டும் டைப் தேர்வுகள் அவசியம்)அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

அதுதான்
ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.இப்பயிற்சி 4 மாதங்கள் வரை இருக்கும்.
ஆங்கிலத்தைப் பொருத்தவரை இக்காலத்தில் பெரும்பாலான கம்யூட்டர்பயிற்சி நிறுவனங்களே இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை நடத்துகின்றன.இதில் 10% கூட தரம் இருப்பதில்லை என்பது நேரில் கண்ட அனுபவ உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் என தனியாக நடத்துபவர்களின் அனுபவம் கம்யூட்டர் பயிற்சிநிலையங்களில் இருப்பதில்லை.

ஆங்கிலமொழியைப் பொருத்தவரை,ஒரு நாளுக்கு புதிதாக 300 புதிய ஆங்கில வார்த்தைகள் உருவாகின்றன.ஒருவருடத்துக்கு சுமார் 1,20,000 புதிய வார்த்தைகள் ஆங்கிலமொழியில் சேருகின்றன.இன்று 26.10.2009 ஆங்கிலமொழியில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை 5,00,000.ஆனால்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் கற்கவேண்டியது வெறும் 3000 ஆங்கில வார்த்தைகள் மட்டுமே!
வெறும் 20 நாளில் சரளமாக ஆங்கிலம் ஒருவரால் பேச ஆரம்பிக்க முடியும்.வெறும் 100 நாளில் சரளமாகவும்,முழுமையாகவும் ஆங்கிலம் பேசமுடியும்.ஆனால்,இந்த சாதனையை எட்ட 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.படித்துக்கொண்டிருப்பவராக இருந்தால்,9ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.தற்காலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளில் பலர் வெறும் 100 நாள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுகின்றனர் என்பது பெருமைக்குரிய உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயில சரியான தருணம் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதுதான்.(பல இடங்களில் 6 ஆம் வகுப்பிலேயே சேர்த்துவிடுகின்றனர்.)
நாம் தமிழில் என்ன நினைக்கிறோமோ,அதை ஆங்கிலத்தில் சுயமாக பேசவும் எழுதவும் முடிகின்றவரை ஆங்கிலம் பயிலவேண்டும்.

இதற்குப்பிறகே,கணினிப்பயிற்சியில் சேரவேண்டும்.இந்த வரிசைப்படி,பயின்றுகொண்டு வந்தால் கம்யூட்டர் எனப்படும் கணினிப்பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக கற்பார்கள்.இந்தத்திறன்கள் பள்ளிப்படிப்புமுடித்து டிப்ளமோ அல்லது டிகிரி முடிக்கும்போது அவர்களுக்கு காம்பஸ் இன் டர்வியூவிலேயே மிகச்சிறந்த வேலை கிடைக்கும்.இதற்குப்பெயர்தான் சாஃப்ட் ஸ்கில் லேபர் எனப்படும் தனித்திறன் நிறைந்த பணியாளர்.இந்தத் தகுதியைத் தான் இன்றைக்கு சென்னையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அதுவும் எந்த(பள்ளி,பாலிடெக்னிக்,டிகிரி,சர்டிபிகேட்) படிப்பு படித்திருந்தாலும்,முதலில் எம்.எஸ்.ஆபிஸ் கற்பது அவசியமாகும்.

அது முடித்தபின்னர்,படம் வரையும் திறன் உள்ளவர்கள் DTP எனப்படும் டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பது நன்று.

அக்கவுண்டன் ட் வேலைக்குச் செல்ல நினைப்பவர்கள் கணக்குப்பதிவியல் படிப்பவர்கள்,படித்தவர்கள், பி.காம் படிப்பவர்கள் டேலி படிக்க வேண்டும்.

நிறைய்ய செலவு செய்யும் வசதியுள்ளவர்கள், DTP படித்தப்பின்பு, அனிமேஷன், கிராபிக்ஸ் எனப்படும் வரைகலை கற்கலாம்.

சிவில்,மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் படிப்பவர்கள் ஆட்டோகேட் படிக்கவேண்டும்.
ECE,EEE,DCE,DCT படிப்பவர்கள் கம்யூட்டர் பழுதுநீக்குதல் எனப்படும் கம்யூட்டர் ஹார்டுவேர் கற்கவேண்டும்.அதன்பிறகு,நெட்வொர்க் கற்கலாம்.அதற்குப்பிறகு,சைபர்க்ரைம் கற்கலாம்.அல்லது ஐ.பி.எம்மின் ஏ.எஸ்.440 கற்கலாம்.

சாப்ட்வேர்துறைக்குச் செல்ல விரும்புவர்கள் சி.சி# ,விசுவல் பேசிக் கற்க வேண்டும்.


ஆனால்,இந்த அடிப்படை விழிப்புணர்வு எத்தனை பேருக்குத்தெரியும்?

பிரம்மாண்டமான விளம்பரம் செய்யும் கம்யூட்டர்பயிற்சிப்பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் செய்வது என்ன தெரியுமா?
PGDCA/DCA/DCP இவற்றில் ஏதாவது ஒன்று படித்தால் மட்டுமே கம்யூட்டரே படித்ததாக அர்த்தம் என ஒரே தவணையில் ரூ.8000/- அல்லது ரூ.10,000/- கறந்துவிடுகின்றனர்.இதனால் என்ன எனக்கேட்கிறீர்களா?

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சி தேவையா?
எல்லா சாப்ட்வேர்களையும் கொஞ்சம்,கொஞ்சம் படித்து எதிலும் தேர்ச்சி பெறாமல் போவதுதான்.இதை எந்த பெற்றோரால் உணரமுடியும்?

பாவம் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஏழையாக இருந்தால் காட்டையும்,மாட்டையும் விற்று கம்யூட்டர் படிக்கவைக்கின்றனர்.

சில நகரங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி நடைபெறுகிறது.பாடங்கள் என்ன தெரியுமா? எம்.எஸ்.ஆபீஸ்,சி.,மட்டுமே.

சரி பி.ஈ. அல்லது டிப்ளமோ படித்துவிட்டு நேராக சென்னைக்கு வேலைதேடிச் சென்றால் அங்கே ஆங்கிலத்தின் முக்கியத்துவம் புரிகின்றது.அங்கேயே ஆங்கிலம் மொழியைக் கற்கச் சென்றால் ஸ்போக்கன் இங்கிலீஷின் மாதக்கட்டணம் ரூ.10,000/-மட்டுமே!

No comments:

Post a Comment