மறைந்து போன அபிஷேக முறைகள்!!!
உங்கள் இஷ்ட தெய்வம் சிவலிங்கமாக இருந்தால் பின் வரும் பொருட்களால் அடிக்கடி
அபிஷேகம் செய்ய முயலுங்கள்!
1.ருத்ராட்சங்கள் 108 வாங்கிக் கொள்ளுங்கள்;ஐந்து முக ருத்ராட்சங்கள்
சுலபமாக கிடைக்கும்;அதைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,மனிதர்கள்
மீதான பந்த பாசம் குறையும்;கூடவே ஈசன் மீது பாசம் அதிகரிக்கும்;
2.சந்தனாதித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,குழந்தை இன்மை குறை
நீங்கிவிடும்;
3.சாம்பிராணித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,பல பிறவிகளில் நாம்
செய்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;
சந்தனாதித் தைலமும்,சாம்பிராணித் தைலமும் கடைகளில் கிடைப்பவை முழு தரம்
வாய்ந்தவை அல்ல;உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்
மூலமாக தயார் செய்யவும்;
ஒரு லிட்டர் ரூ.4000/-முதல் ரூ.6000/-வரை ஆகிறது;
ஊருக்கு வெளியே வெட்டவெளியில் பாழடைந்து இருக்கும் சிவலிங்கத்திற்கு
நீங்களும் அபிஷேகம் செய்யலாம்;
அப்படிச் செய்யும் போது,ஒரு சல்லடை வாங்கிக் கொள்ளுங்கள்;அதன்
மீது,சிறிது தரமான விபூதியும்,வில்வ இலைகளையும் போட்டு,அதன் மீது 108 ஐந்து முக ருத்ராட்சங்களையும்
போட்டு அபிஷேகம் செய்யலாம்;
அமாவாசை,திருவாதிரை,திங்கட்கிழமை வரும் சிவராத்திரி அல்லது பிரதோஷம்
அன்று செய்தால் 1000 கோடி மடங்கு சிவகடாட்சம் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்:
எல்லா தெய்வீகச் சிலைகளுக்கும் சந்தனாதித் தைலம்,சாம்பிராணித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்;ஒரு லிட்டரில் ஒரு முறை அபிஷேகத்திற்கு 50 மிலி முதல் 100 மிலி அளவுக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தலாம்;
விநாயகர்,முருகக் கடவுள்,மஹாவிஷ்ணு,நரசிம்மர்,வராகி,சரபேஸ்வரர்,வீரபத்திரர், மஹா கால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்,சொர்ண வராகி, சிவலிங்கம்,சகஸ்ர லிங்கம்,சுயம்பு லிங்கம்,மரகத லிங்கம்,அத்தி லிங்கம்,ஸ்படிக லிங்கம்,சொர்ண லிங்கம்,ப்ளாட்டின லிங்கம்,நடராஜர்,கங்காள நாதர்,அகத்திய லிங்கம்,வாயுலிங்கம்,வருண லிங்கம்,உதய மார்த்தாண்ட லிங்கம்,சப்தகன்னியர்,சப்த மாதர்கள்,நவக்கிரகங்கள், காவல் தெய்வங்கள்,ஜீவசமாதியில் இருக்கும் மஹான்களின் சிலைகளுக்கும் சந்தனாதித் தைலம் மற்றும் சாம்பிராணித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment