Thursday, February 2, 2017

பணத்தை அள்ளித் தரும் பதிகம்!


சுந்தரர் “திருஓணகாந்தன் தளி” திருத்தலத்தில் இறைவனை நோக்கிப் பாடிய பாடல் இது! இப்பதிகத்தில் உள்ள பத்துப் பாடல்களையும் பாடிட,பொன்னும் பொருளும் கிட்டிடும்;
இப்பதிகத்தை முழு நம்பிக்கையுடன் தினமும் வாசித்துவர,உங்களது வறுமை நீங்கி, பொன்னும் பொருளும் கிட்டி,உங்களுக்கு நல்ல வாழ்வு அமைந்திடும்;

பதிகம் ஜபிக்க ஆரம்பித்த சில நாட்களுக்கு மட்டும் தான் ஜபம் சிரமமாக இருக்கும்;சில வாரங்களில் மனப்பாடம் ஆகிவிடும்;அப்புறம் எப்போது வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;

இப்பதிகத்தை ஒருமுறை எழுதி வைத்து,அதை தினமும் ஜபிக்க வேண்டும்;வீட்டிலும் ஜபிக்கலாம்;சிவாலயத்திலும் ஜபிக்கலாம்;


திருச்சிற்றம்பலம்

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசனை செய்யல் உற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை
கழலடி தொழுதுய்யின் அல்லால்
ஐவர்கொண் டிங்காட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யும் ஆறு ஒன்றருளிச் செய்யீர்
ஓணகாந்தன் தளி உளீரே

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கோற்றட்டியாளார்
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்
ஓணகாந்தன் தளி உளீரே

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணியும் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்றிலர் என்றிரங்கி
மதி உடையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆபற் காலத்தடிகேள் உம்மை
ஒற்றிவைத் திங்குண்ணலாமோ
ஓணகாந்தன் தளி உளீரே

வல்லது எல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய் திறந்தொன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென்னீர்
பல்லை உக்க படுதலையில்
பகல் எலாம் போய்ப் பலி திரிந்திங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளி உளீரே

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறை படாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்புடையவர்க்கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஒடிப் போகீர் பற்றும் தாரீர்
ஓணகாந்தன் தளி உளீரே

வார் இருங்குழல் வாள் நெடுங்கண்
மலைமகள் மது விம்மு கொன்றைத்
தார் இரும் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊர் இடும் பிச்சை கொள்வதென்னே
ஓணகாந்தன் தளி உளீரே

பொய்ம்மையாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவுங்கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை யன்றே எம்பெருமான்
ஓணகாந்தன் தளி உளீரே

வலையம் வைத்த கூற்றம் மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தையாலே
திருவடி தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங்கொன்ற மாட்டேன்
ஓணகாந்தன் தளி உளீரே


வாரம் ஆகித் திருவடிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம் பாம்பு வாழ்வதாரூர்
ஒற்றியூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச்
சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடும் உடையும் தோலே
ஓணகாந்தன் தளி உளீரே

ஓவணமேல் எருதொன்றேறும்
ஓணகாந்தன் தளியுளார்தாம்
ஆவணம் செய்தாளுங் கொண்ட
வரை துகிலொடு பட்டு வீக்கிக்
கோவண மேற்கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்
பறையும் தாம் செய்த பாவம் தானே!


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment