Tuesday, June 8, 2010

எது புண்ணியம்? என்பது பற்றி எனது ஜோதிட அனுபவங்கள்= பாகம் 1


கலிகாலத்தில் பிறந்துவிட்டாலே ஏதாவது ஒரு விதத்தில் நம்மை மன வேதனை வாட்டத்தான் செய்யும்.நாம் செய்யும் பாவம் நமது ஐந்தாவது,ஆறாவது,ஏழாவது தலைமுறையை வாட்டும்.ஜோதிடம் பற்றிய ஆராய்ச்சியில் இதை உணர்ந்தேன்.

உதாரணமாக,எனது அப்பாவழி தாத்தா மற்றும் அவரது அப்பாவின் பெயர்தான் எனக்குத் தெரியும்.அவரது முகம் கூட நான் (புகைப்படத்தில்) பார்க்கவில்லை;எனது அம்மாவழி தாத்தா(அம்மாவின் அப்பா) எனது ஆறாம் வகுப்பு வரைதான் வாழ்ந்தார்.அவரது பேச்சினை இப்போது நினைக்கும்போது நிச்சயம் அவர் எந்த வித பாவமும் செய்திருக்க மாட்டார் என்பதை எனது இந்த 35 ஆம் வயது அனுபவமும்,22 வருட ஜோதிட அனுபவமும் உணர்த்துகிறது.

அதே சமயம்,எனது அப்பாவின் வாய்ஜாலம், செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனது தாத்தா நிச்சயமாக மற்றவர்களுக்கு ஒழுக்க ரீதியான தீங்குகள் செய்திருப்பார் என நம்புகிறேன்.எனது பிறந்த ஜாதகமும்,எனது முதல் குழந்தையின் பிறந்த ஜாதகமும் இதை உறுதி செய்கிறது.

எனது பிறந்த ஜாதகப்படி எனக்கு குழந்தைகளே இருக்ககூடாது.ஆனால்,எனது அப்பாவின் அம்மா நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வாழ்ந்தார்கள்.
நான் கேள்விப்பட்டவரையிலும்,சுமார் 20 ஆண்டுகளாக பலருக்கு இலவசமாக வீட்டிலேயே பிரசவம் பார்த்தார்களாம்.அந்த புண்ணியம்தான் என்னையும், எனது குடும்பத்தையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கிறது.வசதிகள் இல்லாவிட்டாலும் வறுமை எனது தினசரி வாழ்க்கையை பாதிக்கவில்லை.

எனது அப்பாவின் அப்பாவான தாத்தா பாட்டிக்கு ஏழு குழந்தைகள்;அதில் ஒரே ஒருவர்தான் பெண்.
இந்த ஏழுபேருக்கும் 24 குழந்தைகள்.இந்த 24 பேருக்கும் இதுவரை 40 வாரிசுகள்.

எனது அம்மாவின் அப்பாவான தாத்தா பாட்டிக்கு ஆறு குழந்தைகள்;அதில் ஒரே ஒருவர்தான் ஆண்.
இந்த ஆறுபேருக்கும் 11 குழந்தைகள்.

ஆக,எனது அப்பா வழி வம்சத்தில் இருக்கும் 40 பேரன்கள்,பேத்திகள் பெரிய அளவில் செல்வ வளத்துடன் வாழ்ந்து வருகிறோம் என சொல்ல முடியவில்லை;கடந்த 3 ஆண்டுகளில் இந்த 40 பேர்களின் ஜாதகங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.எனது தாத்தா,அவரின் அப்பா செய்த காமக்குற்றங்களின் சாபங்களை இந்த 40 பேர்களும் சுமக்கிறோம்.தினசரி வாழ்க்கையானது சராசரியாகத்தான் போகிறது.

அம்மாவழியில் இருக்கும் 11 பேரில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே பொருளாதாரச் சுயச்சார்பினை அடைந்திருக்கின்றனர்.மற்றவர்கள் ஏதோ வண்டி ஓடுகிறது.இந்த சொந்தக்கதையைச் சொல்லக் காரணம்(நீங்களும் உங்களது முன்னோர்களின் வாரிசுகள்,அவர்களின் குழந்தைகளின் இன்றைய வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்ப்பதற்காக ஒரு உதாரணம் சொன்னேன்) முன்னோர்கள் செய்த பாவங்கள் 50% அளவோடும், நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் செய்த பாவங்கள் 40% அளவோடும் தான் நாம் பிறக்கிறோம்.
இந்தப் பாவங்களை நாம் நமது வாழ்நாளில் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி மற்றும் ராகு மகா திசை, சனி மகா திசை, கேது மகா திசைக் காலங்களில் அனுபவிக்கிறோம்.

ஆனால், எல்லோரும் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ ஆசைப்படுகிறோம்.அதற்கான வழிமுறைகளைத்தான் இங்கு கூற விரும்புகிறேன்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது நின்றிருந்தால் அவர்கள் பிதுர் தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருள்.இதற்கு ராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.ரூ.6000/- செலவும்,இரண்டு இரவுகள் அங்கே தங்கிச் செய்ய வேண்டும்.
சனியும்,செவ்வாயும் ஒருவரது ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் அல்லது இருவரும் ஒரு இடத்தைப் பார்த்தால்,சொத்துக்காக இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு முன்னால் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக சாபமிட்டுள்ளனர் என்று அர்த்தம்.இதற்குப் பரிகாரம் சதுரகிரி, திருஅண்ணாமலை மற்றும் ஒவ்வொருவரின் ராசிக்கேற்ற கோவில்களில் அடிக்கடி அன்னதானம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால்,அந்த ஜாதகர் வாழ்நாள் முழுக்க வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கஷ்டப்பட்டு போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆக,புண்ணியமான காரியங்களை செய்து நிம்மதியாக வாழ்வதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன.எந்த பரிகாரத்தையும் உரிய ஜாதகர் நேரடியாகச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் பரிகாரம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

4 comments:

  1. ஜாதக கட்டங்களை எவ்வாறு எண்ணுவது? லக்னத்தில் இருந்து என்றால் எப்படி கணக்கில் கொள்வது?

    ReplyDelete
  2. சிவனருள் அவர்களே! நீங்கள் ஜோதிடம் கற்றுக்கொள்ளுவது நன்று

    ReplyDelete
  3. ஐயா
    ஜாதகம் கணிக்கும்போது அதாவது துல்லியமாக பிறந்த நேரம் சரியாக சொல்லபடாவிட்டால் ஜாதகமே
    தப்பாகிவிடலாம் அல்லவா. அப்போது தாங்கள் குறிப்பிடும் விபரங்கள் சரியாகி இல்லாமல் போக வாய்ப்பு
    உள்ளதா. அந்த சமயத்தில் எப்படி மேற்கொள்வது.
    வணக்கம்
    drsundaram

    ReplyDelete
  4. ஜாதகம் கணிக்கும்போது நேரம் தவறாகத் தரப்பட்டால் கண்டுபிடிக்கும் சூத்திரத்தை எனது குருநாதர்கள் சொல்லியிருக்கின்றனர்.அதை வைத்து சரியான நேரத்தை கண்டறிந்துவிடலாம்.

    ReplyDelete