Thursday, December 3, 2009

CHINA IS A GREAT DESIRE COUNTRY-2

இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 20:50 IST )
-->
அப்படிக் கூறுவதன் மூலம் எதையெல்லாம் அது தகராறுக்கு உட்பட்ட பகுதிகள் என்று கோருகிறது அல்லது நினைக்கிறது என்பது இன்றுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. இது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி தொடர்ந்து நடந்துவருகிறது.
FILEஇந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராகவுள்ள எம்.கே. நாராயணனும், சீனத்தின் துணைப் பிரதமராக உள்ள தாய் பிங்குவாவும் பேசி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததும் ‘பேச்சுவார்த்தை இணக்கமாகவும், சுமூகமாகவும் நடந்தது’ என்று இந்திய அரசின் சார்பாக அறிக்கை கொடுக்கப்படும். எப்படிப்பட்ட இணக்கம், எதில் சுமூகம் என்றெல்லாம் ஒருவருக்கும் ரகசியமாகக் கூட கசிந்ததில்லை. மொத்தத்தில் இந்தியர்களாகிய நமக்கு எல்லாமே பாசிஸ்ட்டிவாகக் காட்டப்படுகிறது என்பதைத் தவிர எந்த விவரமும் தெரியாது.இறுதியாக சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த 13வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் சார்பாக வரைபடம் கொடுக்கப்பட்டது என்று மட்டும் கூடுதலாக ஒரு தகவல் வந்தது. ஆனால், சீனத் தரப்பு அப்படி ஏதும் அளித்ததா என்பது பற்றியெல்லாம் ஒரு தகவலும் இல்லை. ஆனால் பேச்சுவார்த்தை இணக்கமாக இருந்தது என்றும், அடுத்தச் சுற்றில் இறுதித் தீர்வுத் திட்டம் பரிமாறிக் கொள்ளப்படும் என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. நமக்கு இது முன்னேற்றமாகவே எண்ணத் தோன்றும் நிலை. ஆனால், இத்தனைச் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்ததை சீனத் தரப்பு எப்படி வர்ணிக்கிறது தெரியுமா? “இரு பெரும் பொருளாதாரங்களுக்கும் இடையிலானப் பகுதித் தகராறுகள் (Territorial disputes) திசையின்றிச் செல்வதாகவே தெரிகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாட்டை விட மோதலே அதிகம் உள்ளது. பகுதித் தகராறைத் தீர்க்க கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மட்டங்களில் இரு நாடுகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. ஆயினும் எந்த ஒரு நிச்சயமானத் தீர்வையும் உருவாக்குவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது” என்று சீன அரசு ஆதரவு நாளிதழான குளோபல் டைம்ஸ் (அக்டோபர் 14,2009) கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் “சீனத்தின் அணுகுமுறையை பலவீனமாக இந்தியா கருதினால் அது படுமோசமாக தவறாகவிடும்” என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது!ஆனால் நமக்கு மிகப் பாசிஸிட்டிவ்வான படத்தை காட்டுகிறது இந்திய அரசு. பிரதமரின் அருணாசலப் பிரதேச பயணத்திற்கு கண்டனம்
PIBஇந்த நிலையில்தான் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் சென்றதற்குச் சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதெல்லாம் சீனத்தின் இணையத் தளங்களில் வெளியான கண்டனங்களையும் கட்டுரைகளையும் படித்தால்... இங்கு நமது அயலுறவு அமைச்சரும், செயலரும் பேசுவதற்கும், அந்நாட்டு அரசின் நிலைக்கும் உள்ள இமாலய வேறுபாடு அப்பட்டமாகத் தெரியும். “தங்கள் நாட்டிற்குச் சொந்தமான (தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது) 1,20,000 சதுர கி.மீ. பரப்பில் 90,000 சதுர கி.மீ. பரப்பை அருணாசலப் பிரதேசம் என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதே தகராறுக்குக் காரணம்” என்று குளோபல் டைம்ஸ் (அதே நாளில்) கூறியுள்ளது.அது மட்டுமல்ல, அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் பெளத்த ஆசிரமத்திற்கு திபெத் தலைவர் தலாய் லாமா ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள இந்தியா அனுமதித்தை கடுமையாக எதிர்த்து சீனா.

No comments:

Post a Comment