Thursday, December 10, 2009

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை:பா.ஜ.க.வின் எச்சரிக்கை

புதுடில்லி:"சீனாவுக்கும், நமக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அந்த நேரத்தில் நமக்கு உதவும் வகையிலான நாடு ஒன்றுடன் நாம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சீன - இந்திய உறவுகள் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:சீனாவுக்கு எதிராக நமக்கு உதவும் வகையில், சர்வதேச அளவில் ஒரு நாட்டுடன் நாம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது அவசியமான ஒன்று. பொருளாதார லட்சியங்களை அடைவதற்காக, அமெரிக்காவும், சீனாவும் கடந்த பல ஆண்டுகளாக பல நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்டன.
மேலும், பனிப்போர் காலத்தில் ரஷ்யாவை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா இவ்வாறு செய்தது.ஆனால், இதையெல்லாம் நாம் கண்டு கொள்ளவில்லை. சீனா தொடர்பான நீண்ட கால கொள்கை ஒன்றையும் நாம் உருவாக்கவில்லை. சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு சாதகமான வகையில் உலகையே இரண்டாக பிளவுபடுத்தியுள்ளன. இந்தியாவும் சீனாவும் சமம் என, மற்ற நாடுகள் சொல்வதை சீனாவால் ஒரு போதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. அதனால், 1962ம் ஆண்டில் நம் நாட்டின் மீது போர் தொடுத்தது. அதுபோல் மீண்டும் நடந்தால், இந்தியா சும்மா இருக்கக்கூடாது.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அணு எரிபொருள் சப்ளை நாடுகள், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி என, பல சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு பலமான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது சீனா. அதே நேரத்தில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பெறவும் உதவியுள்ளது. அதனால், சீனா தொடர்பான கொள்கையில் மாற்றம் தேவையா அல்லது வேண்டாமா என, நாம் முடிவு செய்ய வேண்டியது அவசியம். சீனாவுக்கு என தனி கொள்கையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சந்தீப் தீட்சித் கூறியதாவது:சீனாவைக் கண்டு இந்தியா பயப்படத் தேவையில்லை. மற்ற நாடுகள் உடனான எல்லையைப் போல, சீனாவுடனான எல்லை வரையறுக்கப்படவில்லை. இந்தியா - சீனா இடையேயான அனைத்து எல்லைப் பிரச்னைகளையும் தீர்க்க, முதன்முறையாக மத்தியில் உள்ள ஐ.மு.கூ., அரசு முற்பட்டுள்ளது.
நம் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதாக நாம் குற்றம் சாட்டுகிறோம். அதேபோல், சீனப் பகுதியை நாம் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பதாக அந்நாட்டு அரசு சொல்கிறது.சீனாவுக்கு எதிராக மற்றொரு நாட்டின் உதவியைப் பெற வேண்டுமென எதிர்க்கட்சியினர் கூறுவது, அரசியல் ஆதாயம் தேடும் செயல். நமது ராணுவம் பலமற்றது அல்ல. யாராவது நம்மை எதிர்க்கத் துணிந்தால், அதற்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பர்.இவ்வாறு சந்தீப் தீட்சித் கூறினார்.


நன்றி:தினமலர் 10.12.2009


காங்கிரஸ் கட்சி எப்போதுமே அசட்டையாகவும், பொறுப்புணர்ச்சியின்றியுமே உலக அரசியல் மற்றும் எல்லைப்பிரச்னைகளைக் கையாண்டுள்ளது.அதற்கும்,அதன் தலைவர்களுக்கும் தேசபக்தி இருக்கிறதா? என்ற அளவிற்கே இருந்திருக்கின்றனர்.



கி.பி.1962 ஆம் ஆண்டு இந்தியா சீனா போர் நடந்த போது சோனியா தனது கணவர் ராஜீவை அழைத்துக் கொண்டு புது டெல்லியில் இருக்கும் இத்தாலி தூதரகத்தில் தஞ்சமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்ட வீரப்பெண்மணிதான் இன்று நம்மை நிழலாக ஆளுகிறார் என உணரும்போது புல்லரிக்கிறது.






No comments:

Post a Comment