Tuesday, July 12, 2016

நம் ஒவ்வொருவராலும் இப்பிறவியிலேயே முக்தி அடையமுடியும்!


உங்களது வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும்,அதை அடையத் தேவையான முதல் தகுதி: ஆத்மபலம்!

பணம் சம்பாதிக்கவோ
அல்லது

அதிகாரத்தைக் கைப்பற்றவோ
அல்லது

நமக்கு என்று செல்வாக்கினை உருவாக்கவோ
அல்லது

சுகபோகமாக வாழவோ
இங்கே நாம் பிறக்கவில்லை;ஆனால்,இதை பிறந்த ஏழு வயதிற்குள் மறந்துவிடுகின்றோம்;அதுதான் பிரச்சினை;அதுவும் சாதாரண பிரச்சினை அல்ல! ஜன்மாந்திர பிரச்சினை!!

அதென்ன ஜன்மாந்திரப் பிரச்சினை?

ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் பிறந்ததும் ,பிறப்புக்கான நோக்கத்தை அறியாமல் வேறு ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி திசை திரும்பிவிடுவதுதான் ஜன்மாந்திர பிரச்சினை!

சென்ற மூன்று யுகங்களில் நாம் ஒவ்வொருவரும் இதே பூமியில் வாழ்ந்திருக்கின்றோம்;அப்போது நாம் செய்த தவறுகளின் விளைவுகளை அனுபவிக்கவே இப்போது பிறந்து வாழ்ந்து வருகின்றோம்;

இருப்பினும் இதில் இருந்து மீள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும்,ஒவ்வொரு மாதமும் நமக்குரிய வாய்ப்பினை இறைசக்தி வழங்கிக்கொண்டே தான் இருக்கின்றது;

வெகு சிலர் மட்டுமே இதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு ஜன்மாந்திர நோக்கத்தை நோக்கி திரும்புகின்றோம்;

ஈசனைத் தவிர,அனைவருமே மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு சென்று கொண்டு இருப்பவர்களே!


நமது பாரதத்தில் இரட்டை ஆட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றது;

ஒரு கிராமத்தை வி.ஏ.ஒ,.நிர்வாகிக்கின்றார்;இவருக்கு இணையாக பஞ்சாயத்து கவுன்சிலர் என்ற மக்கள் பிரதிநிதியும் நிர்வாகம் செய்கின்றார்;


ஒரு நகரத்தை தாசில்தார் நிர்வாகம் செய்கின்றார்;இவருக்கு இணையான மக்கள் பிரதிநிதியான ச.ம.உ.(சட்டமன்ற உறுப்பினர்)வை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களே தேர்தல் மூலமாக தேர்வுசெய்கின்றனர்;


ஒரு மாவட்டத்தை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகம் செய்யும் அதே சமயத்தில்,மாநில அரசாங்கத்தின் மந்திரியும் மக்கள் பிரதிநிதியாக நிர்வாகித்துவர,
ஒரு மாநிலத்தை ஆளுநர் நிர்வாகித்து வர,அதே மாநிலத்தை முதலமைச்சரும் நிர்வாகித்து வருகின்றார்;

ஒரு நாட்டை ஜனாதிபதி நிர்வாகித்துவருகின்றார்;இவருக்கு இணையான மக்கள் பிரதிநிதியாக பிரதமரும்,அவரது அமைச்சரவையும் நாட்டை நிர்வாகித்துவருகின்றார்கள்;
இதே போலத்தான்,ஆன்மீக உலகத்திலும்!


சராசரி மனிதரை விடவும் கொஞ்சம் சக்தி வாய்ந்தவர் ஜோதிடர்களும்,அருள்வாக்கு சொல்பவர்களும்;


இவர்களை விடவும் கோவில் பூசாரிகள்,ஹரிபட்டாச்சாரியார்கள்,சிவாச்சாரியார்கள் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்;இவர்களுக்கு இணையாக 10 ஆண்டுகள் தினமும் பசுவை பராமரிப்பவர்கள் புண்ணியம் சேர்க்கின்றார்கள்;

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களே ஜீவசமாதியில் இருப்பவர்கள்,ஜீவசமாதிக்கு முயற்சி செய்பவர்கள்;இவர்களுக்கு இணையாக 30 ஆண்டுகள் தினமும் பசுவைப் பராமரிப்பவர்கள் புண்ணியம் சேர்க்கின்றார்கள்;

இவர்களுக்கு அடுத்த நிலையில் சித்தர் பெருமக்கள் இருக்கின்றார்கள்;தொடர்ந்து மூன்று பிறவிகளாக,மூன்று ஜன்மங்கள் முழுவதும் பசுவுக்கு அனைத்து பராமரிப்பையும் தானே செய்பவர்கள் ஆவர்;

இங்கே இருந்து மேல் உலகத்தின் பதவிகள் ஆரம்பம் ஆகின்றன;

சித்தர்களுக்கு அடுத்த நிலையில் இருந்து போக உலகம் ஆரம்பமாகின்றது;

கந்தர்வர்கள்,தேவர்கள் இவர்களுடைய தலைவன் இந்திரன்;
இந்திரனுக்கு அடுத்த நிலையில் பிரம்மாவும்,பிரம்ம லோகமும்;
பிரம்மாவுக்கு அடுத்த நிலையில் விஷ்ணுவும்,விஷ்ணு உலகமும்;
விஷ்ணுவுக்கு அடுத்த நிலையில் ருத்ரனும்,ருத்ர உலகமும்;
ருத்ரனுக்கு அடுத்த நிலையில் 11 ஏகாதசருத்திரர்களும் அவர்களுடைய உலகமும்;
இவர்களுக்கு அடுத்த நிலையில் ஐந்து விதமான சிவம் என்ற தெய்வீக நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன;இதில் ஐந்தாவது உயர்ந்த நிலையே அருணாச்சலம் என்ற அண்ணாமலையார் இருக்கின்றார்;இவரது துணை சக்தியே இரண்டாம் நிலை வராகி!


இவர்களுக்கும் மேலே ஆதிசிவம் இருக்கின்றார்;இவரது துணை சக்தியே ஸ்ரீகோமதி அம்பாள்;
இவர்களுக்கும் மேலே இருப்பதுதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான ஸ்ரீவாராஹி!
ஸ்ரீவாராஹியின் தலைமை சக்தி ஸ்ரீலலிதா பரமேஸ்வரி இருக்கின்றாள்;இவளுக்கு பல பெயர்கள் இருக்கின்றன;வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி!
இந்த பிரபஞ்ச அன்னைக்கும் மேலே யார் இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை;


மனித இனத்தில் பிறந்த நமக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால் தான்,இறைசக்தியான ஈசன்,நமது குருவை நாமே தேடிக் கண்டுபிடிக்கும்படி நமக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளார்;மனிதர்களைத் தவிர,மற்ற ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒரு குரு உண்டு;


இன்றைய கால கட்டத்தில் விசுவாசம் மிக்க சீடர்கள் எல்லா ஊர்களிலும்,அனைத்து கிராமங்களிலும் இருக்கின்றார்கள்;உண்மையான,தன்னலம் கருதாத,தனது சீடனின் எதிர்காலத்தை தனது மந்திர தந்திரத்தால் கண்டறிந்த பின்னர் பொறாமைப்படாத உத்தம குருதான் இல்லை;தேடியும் கிடைப்பதில்லை;கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது;


குரு இல்லாமல் ஆன்மீகத்தில் ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது;


அண்ணாமலை கிரிவலம் 108 முறை வந்தால்,நம்மை முழுமையான சீடனாகவே அருணாச்சலேஸ்வரர் ஏற்றுக் கொள்வார் என்பது எமது கடந்த பத்தாண்டு கால கிரிவலத்தின் மூலமாக பெற்ற அனுபவ உண்மை;

108 ஜன்ம நட்சத்திர நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 திருவாதிரை நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 கார்த்திகை நட்சத்திர நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 அமாவாசை இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 தேய்பிறை சிவராத்திரி நாட்களில் அண்ணாமலையை வலம் வரலாம்;

அல்லது

108 விசாக நட்சத்திர நாட்களில் அண்ணாமலையை கிரிவலமாக வரலாம்;

அல்லது

சித்தர்களின் தலைவரும்,தமிழினத்தின் தந்தையுமான அகத்தியமகரிஷி அவதாரம் ஆனது ஆயில்யம் நட்சத்திரத்தன்று!(சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டரும் இதே நட்சத்திரத்தில் தான் உதயமானார்!)

108 ஆயில்யம் நட்சத்திர நாட்களில் அருணாச்சலத்தை சுற்றி வரலாம்;


இப்படி செய்தாலே நமது ஆன்மீக குரு,அதுவும் உத்தமமான குரு நமக்கு அமைந்துவிடுவார் என்பது அண்ணாமலை சத்தியம்!


1008 முறை அருணாச்சலம் என்ற அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவை நாம் அடையாளம் கண்டுவிடலாம்;அப்புறம்,இப்பிறவியிலும்,இனி வர இருக்கும் பிறவிகளிலும் நமக்கு நட்சத்திர சற்குருவின் வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டே இருக்கும்;


மறுபிறவியில்லாத முக்தி கிட்டிட பலவிதமான ஆன்மீக வழிமுறைகள் இருக்கின்றன;அவைகளில் ஒரு சில மட்டும் இங்கே:-

ஒரு நாளுக்கு ஒருமுறை வீதம் ஒருநாள் கூட விடாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்திற்கு மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சென்று வழிபாடு செய்தாலே முக்தி கிடைத்துவிடும்;என்பது சித்தர்களின் தலைவரும் நமது தமிழ்மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் வாக்கு!


துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் காலையிலும்,மதியமும்,இரவிலும் அன்னதானம் செய்ய வேண்டும்;இப்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்,அதிகபட்சம் 40 ஆண்டுகள் அன்னதானம் செய்தால் இப்பிறவியோடு முக்திக்கு வழிகிட்டிவிடும்;

குறைந்தது 5 ஆண்டுகள்,அதிகபட்சம் 24 ஆண்டுகள் வரை தினமும் பசுவுக்கு சேவை(குளிக்க வைத்தல்,உணவு அளித்தல்,பராமரித்தல்,பாதுகாத்தல்) செய்வதன் மூலமாகவும் முக்தியை அடைய முடியும்;

தனது வாழ்நாளில் ஒன்பது பாழடைந்த சிவாலயங்களை சீர்திருத்தி,மீண்டும் கும்பாபிஷேகம் செய்துவிட்டால்,முக்தி கிட்டிவிடும்;இந்த வேலைக்கான தலைமை ஒருங்கிணைப்பை மட்டுமே ஒருவர் செய்ய வேண்டும்;அனைத்தையும் தனது சொந்தப் பணத்தினால் செய்வதால் முழுப்பலன் கிட்டிவிடாது என்பதையும் நினைவிற்க் கொள்ளவும்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


No comments:

Post a Comment