Wednesday, April 17, 2013

சித்திரை மாத பவுர்ணமியன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!



விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 வியாழக்கிழமை இரவு மணி 2.08 க்குத் துவங்குகிறது;துவங்கி மறுநாள் 26.4.13 வெள்ளிக்கிழமை இரவு 12.10க்கு நிறைவடைகிறது;இந்த பவுர்ணமியில் வியாழக்கிழமை இரவு மணி 1.19க்கு சந்திர கிரகணம் துவங்கி இரவு 1.55க்கு நிறைவடைகிறது.
மேஷ ராசியில் கேது நிற்கிறது;கேதுவுடன் சூரியன் சித்திரை மாதம் முழுவதும் இணைந்திருக்கிறது;துலாம் ராசியில் ராகு நிற்கிறது;இந்த துலா ராகுவுடன் சந்திரன் 25.4.13 மற்றும் 26.4.13 இரண்டு நாட்களும் சேருகிறது.ராகுவுடன் சேரும் சந்திரன்,ஆத்மக்காரனாகிய சூரியனுக்கு நேர் ஏழாம் ராசிக்கு வருகிறது.எனவே,சந்திரன் முழுபலமான பவுர்ணமியை எட்டுகிறது.அவ்வாறு பவுர்ணமியாக உதயமாகும்போது உடன் இருக்கும் ராகு அதை சந்திரக் கிரகணமாக மாற்றுகிறது.சாஸ்திரத்தை முழுமையாகவும்,சிரத்தையாகவும் பின்பற்றுவோர் இந்த 25.4.13 வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது;
கிரகண நேரத்தில் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் அளவற்ற தெய்வ சக்தியை நமக்கு ஈர்த்துத் தரும்;


எனவே,ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புவோர்,25.4.13 வியாழக்கிழமை நள்ளிரவு மணி 1.20க்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை நள்ளிரவு 1.50க்கு நிறைவு செய்ய வேண்டும்.மற்ற நாட்களில் நீங்கள் ஜபிக்கும்போது என்ன உணருகிறீர்களோ,அதை விடவும் வித்தியாசமான,அதே சமயம் அதிசயத்தக்க உணர்வுகளைப் பெறுவீர்கள்.


இந்த நிமிடங்களில் நீங்கள் ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,அது பல கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.
தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களும்,கால பைரவர் வழிபாடு செய்பவர்களும் இயற்கை தரும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.


எத்தனையோ ஜன்மங்களாக நாம் செய்த கர்மவினைகளை மொத்தமாக இந்தப் பிறவியிலேயே கரைத்து நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ இந்த நாள் ஒரு அரிய வாய்ப்பினை வழங்குகிறது.நமது கர்மவினைகள் தீர நாம் இதுபோல குறைந்தது மூன்று ஆண்டுகளும்,அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் அல்லது காலபைரவ மந்திர ஜபம் அல்லது லிகிதம்(எழுதுதல்) பின்பற்ற வேண்டும்.


ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. IS it applicable for people who stay in US the timings?

    ReplyDelete