Tuesday, January 13, 2009

ஜீனியஸ் தமிழ் புத்தகங்கள்--வலைப்பூவிற்கு அனைவரும் வருக! ஜீனியஸ் ஆகுக! நமது



ஜீனியஸ்தமிழ்புக்ஸ் வலைப்பூவிற்கு வருக! வருக!! வருக!!!


இன்று இணையம் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பல முக்கிய வேலைகள் மனிதனால் மட்டுமே செய்யமுடியும்.என்வே,presence of Mind & Soft Skill ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அந்தத் தேர்வினை ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணிப்பொறி இருந்தால் போதும்.அந்த தேர்வினை சுலபமாக எழுதிவிடலாம்.


நீங்கள் உங்களது உலகத்தில் ஜீனியஸ் என்று மதிக்கப்பட வேண்டுமா?
தனிமனித வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ வேண்டும்.அதற்குத் தேவை முதலில் ஞாபக சக்தி.இந்த ஞாபக சக்தி படிப்பதால் மட்டுமே வளரும்.இந்த வலைப்பூ படிப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.வெறும் டிகிரி,டிப்ளமோவால் ஓரளவே உபயோகம் உண்டு.அதற்கும் வெளியே ஒரு பிரம்மாண்டமான உலகம் உள்ளது.அந்த உலகத்தை எதிர்கொள்ள புத்தகம் படிப்பது ஒரு அவசியத் தகுதியாக உள்ளது.புத்தக உலகம் ஒரு மாபெரும் கடல்.அதில் குப்பைகளே அதிகம்.அதில்,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ள புத்தகங்களை –கடந்த 20 ஆண்டுகளாக நான் படித்து-அதன்படி பின்பற்றி-வெற்றி பெற்றதால்-இந்த புத்தகங்களை உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.

டாக்டர் அப்துல்கலாம்,சுவாமி விவேகானந்தர்,எழுத்தாளர் பாலகுமாரன்,இந்திரா நூயி,பாரதியார்,பாரதிதாசன்,ஏக்நாத் ரானடே,விநாயக தாமோதர சாவர்க்கர்,நாதுராம் விநாயக் கோட்சே,ஓசோ,சுத்தானந்தபாரதி,கவிப்பேரரசு கண்ணதாசன்,வ.ரா.,அகிலன்,மிஸ்டிக் செல்வம்,எம்.எஸ்.உதயமூர்த்தி... என மிகப்பெரிய ஆத்மாக்கள் உயிரைக் கொடுத்து தமிழில் படைப்புகள் படைத்துள்ளனர்.அவற்றில் நமது வாழ்க்கையைத் திருப்புமுனையாக்கும் புத்தகங்களைப் பற்றி பார்ப்போம்:

படிப்பது என்பது இலக்கில்லாத பயணம்.. .. அதன் சுகத்தை உணர்ந்தவர்கள் வேறு எதற்கும் மயங்கமாட்டார்கள்.
கல்வி கரையில கற்பவை நாள் சில
மெல்லநினைக்கின் பிணி பல
இந்த வலைப்பூ ஆரம்பத்தில் உங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றும்.சில வருடங்களில் உங்கள் துறையில் சாதனையாளராக மாற்றும்.நீங்கள் இந்த வலைப்பூவில் பரிந்துரைக்கும்புத்தகங்களைப் படித்தால்.. ..

No comments:

Post a Comment