Friday, April 20, 2012

போபால் விஷவாயு அழிவும் அமெரிக்காவின் சுயநலமும்


போபால் விஷவாயுஅழிவும் அமெரிக்காவின் சுயநலமும்







யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனம் நமது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில் தனது தொழிற்சாலையை ஊருக்குள் நிறுவியது.அதன் கழிவு டாங்க் கி.பி.1984 ஆம் ஆண்டில் வெடித்து பல்லாயிரம் இந்தியர்கள் சில நிமிடங்களில் மரணமடைந்தனர்.இந்த விபத்தின் விளைவாக,இந்த விபத்து நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகியும்,இறந்தவர்களுக்கும்,பாதிக்கப்பட்டு நடைபிணமாக வாழ்பவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை சிறிதும் தரப்படவில்லை;


விபத்து நிகழ்ந்ததும்,இந்த ஆலையின் தலைமை நிர்வாகி வாரன் ஆண்டர்சன் ராஜமரியாதையோடு அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்ல அப்போதைய மத்தியப்பிரதேச மாநில முதல்வர் அர்ஜீன்சிங்கும்,அப்போதைய இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.






தற்போது கி.பி.2010






இந்தியாவில் அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால்,இழப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.500 கோடிகள் வரை மட்டுமே இந்த அணு மின் உலைகளை அமைத்துத் தரும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்குத் தரும்.(உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால்,அணு உலைகளை அமைத்துத் தரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தரும் இழப்பீட்டுத்தொகை குறைந்த பட்சம் ரூ.1500 கோடிகள் தரும் என சட்டம் இயற்றியுள்ளன.)இந்த சட்டத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கியப் பின்னரே, அமெரிக்க நிறுவனங்கள்,இந்தியாவுக்கு அணுமின்சாரம் தயாரிக்கும் புதிய அணு மின் நிலையங்களை அமைத்துத் தரும் என அமெரிக்க அரசு அடம்பிடிக்கிறது.






(அதாவது போபாலில் நாங்கள் 40000 இந்தியர்களைக் கொன்றோம்.இந்தியர்களாகிய நீங்கள் எங்களை இன்னும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறீர்கள்.மிக்க நன்றி!!!


தற்போது, நாங்கள் ஓட்டை உடைசலான காயலான் கடைக்குப் போக வேண்டிய அணு ரியாக்டர்களை உங்களுக்கு கொள்ளை விலைக்கு தருவோம்;அது நிச்சயம் விபத்தினை உருவாக்கும்.ஆனால்,அதையும் உங்கள் நாட்டு சட்டப்படி, எங்களுக்கு சட்டப்பாதுகாப்புடன் தருவோம்.இதன் மூலம் இனிமேல் கோடிக்கணக்கான இந்தியர்களைக் கொல்வோம்; என சுயநல நயவஞ்சக அமெரிக்கா புரிய வைக்கிறது.)





















அகில இந்திய காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தியர்களின் நலனுக்கு ஆதரவாக இருந்ததில்லை;இந்தியாவின் சுயகவுரவத்தைப் பாதுகாக்கும் விதமாக செயல்பட்டதில்லை; ஒருநாளும் இந்தியாவும் அமெரிக்காவும் நட்புநாடாக இருக்கப் போவதில்லை;






காங்கிரஸ் கட்சியின் பிறந்த ராசி கன்னி;பிறந்த நட்சத்திரம் அஸ்தம்.






இந்தியாவின் சுதந்திர ஜாதகப் படி,இந்தியாவின் சுதந்திர ராசி கடகம்;நட்சத்திரம் பூசம்.






பழைய வல்லரசு அமெரிக்காவின் பிறந்த(சுதந்திர) ராசி கும்பம்.சுதந்திர நட்சத்திரம் சதயம்.தான் என்னநினைக்கிறோம் என்பதை யாருக்கும் காட்டாமல், பிறரை ஆழம் பார்ப்பதில் கும்பராசிக்கு நிகர் யாருமில்லை;






கும்பராசிக்கு ஆறாம் ராசியான கடகம்;கடக ராசிக்கு எட்டாம் ராசியான கும்பம். இரண்டு ராசிகளுக்கும் ஒருபோதும் ஒத்துப்போகாது;இரண்டு நாடுகளும் ஒருபோதும் நட்புநாடாக இருக்கவே முடியாது.










இப்பேர்ப்பட்ட தேசபக்த ஆட்சியாளார்களை நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் ஆன்மீகக்கடல் வாசகர்களே!!!

No comments:

Post a Comment