Friday, April 20, 2012

நமது செல்வ வளம் பெருக ஒரு பொதுவான ஜோதிட ஆலோசனை


செல்வ வளம் பெருக ஒரு வழிபாட்டுமுறை



நன்றி:எனது மானசீககுரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்






ஒவ்வொரு தமிழ்வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று வானுலகத்திலிருந்து பூமிக்கு செல்வத்தின் அதிபதியாகிய குபேரபகவான் வருகிறார்.அன்றைய தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் அவர் திரு அண்ணாமலையிலுள்ள குபேர லிங்கத்திற்குப் பூஜை செய்கிறார்.அப்போது நாம் அங்கே இருக்க வேண்டும்.பூஜை முடிந்த பிறகு,இரவு சுமார் 7 மணியளவில் அவர் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுகிறார்.அதே போல் நாமும் கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்த பிறகு அவர் அன்றிரவு திரு அண்ணாமலை கோவிலில் தங்குகிறார்.நாம் திருஅண்ணாமலை நகரில் தங்க வேண்டும்.

(இந்த 2010 ஆம் வருடம் 4.12.2010 சனிக்கிழமையன்று குபேர கிரிவலம் வருகின்றது.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் அனைவரும் குடும்பத்துடன் திரு அண்ணாமலைக்கு வருக!!!)






மறுநாள் குபேர பகவான் திருஅண்ணாமலையிலிருந்து திருப்பதிக்குச் செல்லுகிறார்.நாமும் அதேபோல்,திருப்பதிக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் சென்று,திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல்,வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இதுவே செல்வச் செழிப்புக்கு வழி!!!






இந்த வழிமுறையை ஒரே ஒரு முறை செய்ததும், சிலருக்கே செல்வச் செழிப்பு உண்டாகும்.பலருக்கு உண்டாவது அபூர்வம்.ஏன்?


ஏனெனில்,நாம் செய்த முற்பிறவி கர்மங்கள்(பாவங்கள்), நமது முன்னோர்கள் செய்த கர்மங்கள், நாம் இப்பிறவியில் செய்த கர்மங்கள் நாம் செல்வச் செழிப்படைவதைத் தடுத்துக்கொண்டிருக்கும்.


ஆனால்,ஒரே ஒரு முறை இப்படி சென்றுவந்ததும் நாம் பார்க்கும் வேலை அல்லது செய்யும் தொழிலில் ஒரு படி முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும் என்பது நிஜம்.இதற்கு எனது வாழ்க்கையே சாட்சி.





சரி! இந்த கர்மங்களை அடியோடு அழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை சிவராத்திரி நாட்களில் திரு அண்ணாமலைக்கு வர வேண்டும்.வந்து அன்றிரவு கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி ஒரு வருடம் வரை அதாவது 12 முறை கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி சென்றுவிட்டால், நாம் ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,சீரோடும்,நிம்மதியாகவும் வாழ்வது உறுதி!!!


இந்த ஜோதிட ஆலோசனையை எமக்கு அளித்த எனது மானசீக குரு பி.எஸ்.பி.ஐயா அவர்களுக்கு


நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.


No comments:

Post a Comment